சசிகுமாரை காப்பாற்றுவார்கள்… என்னைக் காப்பாற்ற வரமாட்டார்கள் – வெளிப்படையாக பேசிய எச்.வினோத்!
H Vinoth Recent Interview: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எச் வினோத். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சில விசயங்களைப் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சதுரங்கவேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் எச் வினோத். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே மக்களிடையே மாபெரும் கவாந்த்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவர் தற்போது நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் ஜன நாயகன் படத்தினை இயக்கி உள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதமே வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகாமல் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் படம் எப்போது வெளியாகும் என்று விஜயின் ரசிகர்களும் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் சென்சார் பிரச்சனை எப்போது முடியும் என்று காத்திருக்கும் நிலையில் ஜன நாயகன் படத்தின் இயக்குநர் எச் வினோத் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சசிகுமாரை காப்பாற்றுவார்கள்… என்னைக் காப்பாற்ற வரமாட்டார்கள்:
அதன்படி இயக்குநர்கள் எச். வினோத், ராஜூ முருகன், பாண்டியராஜன் மற்றும் சமுத்திரகணி ஆகியோர் அந்தப் பேட்டியில் கலந்துகொண்டனர். அதில் இயக்குநர் எச் வினோத் பேசியதாவது, மை லார்ட் படம் அரசியல் பற்றி பேசுகிறது. இந்த சசிகுமார் கதாபாத்திரம் அதைப் பற்றிப் பேசினால், பத்திரிகையாளர் காப்பாற்றுவார். ஆனால் நான் அரசியல் பற்றிப் பேசினால் யாரும் என்னைக் காப்பாற்ற வரமாட்டார்கள் என்று ஜன நாயகன் பிரச்சனையைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிடுகிறார், யாரும் அவரை ஆதரிக்க முன்வரவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Also Read… ஓடிடியில் பராசக்தி படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் வைரலாகும் எச். வினோத் பேச்சு:
#HVinoth Recent: “#MyLord speaks about politics. If Sasikumar character speaks about it, journalist will save. But if I speak about politics no one comes to save me”
He indirectly mentions about #JanaNayagan, that no one is coming forward to support him💔pic.twitter.com/TiymbdlMzG
— AmuthaBharathi (@CinemaWithAB) February 14, 2026



