தயார் நிலையில் இடைக்கால பட்ஜெட்… சட்டப்பேரவையில் முன்னேற்பாடுகள்… அமைச்சர்கள் ஆய்வு!
Tamil Nadu Government Interim Budget : தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை காலை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் எ. வ. வேலு மற்றும் கோவி. செழியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் இரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆளும் திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக ஆலோசனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, அதில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாகவும், அதில் அறிவிக்கக்கூடிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 17) தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை 9:30 மணி அளவில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது தொடர்பாக அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அதில் முடிவெடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டமன்றத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் முன்னேற்பாடுகளை அமைச்சர் ஆய்வு
இந்த ஏற்பாடுகளை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு செய்தார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கைகள், மேஜைகள், அவர்கள் பேசும் மைக்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், சட்டப்பேரவை செயலர் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். திமுக அரசின் 5 ஆண்டு ஆட்சி காலம் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் கட்சி மீண்டும் ஆட்சியை அமைக்கும்.




மேலும் படிக்க: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..
மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பட்ஜெட்
இந்த நிலையில், 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை திமுக அரசு நாளை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்பதால் தான். அதன்படியே, பொதுமக்கள் எதிர்பார்க்கும் வகையிலும், எதிர்க்கட்சிகள் அரண்டு போகும் அளவுக்கு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இருக்கும் என்று திமுக அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
சட்டபேரவையில் நாளை (பிப்ரவரி தமிழக அரசு சார்பில், 2026 – 27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டபேரவையை நேரில் வந்து ஆய்வு செய்தார், உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உடனிருந்தார் pic.twitter.com/GK4fLuwazu
— E V Velu – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu) February 16, 2026
பெண்களை குறி வைத்து இடைக்கால பட்ஜெட்
மேலும், இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், மாணவ, மாணவிகள் ஆகியோரை கவரும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நாளை காலை முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை தர உள்ளார். இதை தொடர்ந்து, சபாநாயகர் சட்டப்பேரவையை தொடங்கி நடத்துவார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதில் உள்ள அறிவிப்புகள் பட்டியலிடப்படும். பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
மேலும் படிக்க: “எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை விஜய் பயன்படுத்தக்கூடாது”.. திண்டுக்கல் சீனிவாசன்..