AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சம்மர் சுற்றுலா… வேலூரில் இருந்து 1 மணி நேர பயணம்.. 4 ஆயிரம் அடி உயரம்.. த்ரில்லிங்கான அனுபவம்!

Jawadhu Hills Tourist Spot : திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட மக்கள் ஒன் டே சுற்றுலா செல்ல செல்ல விரும்பினால் அருகில் இருக்கும் ஜ[வ்வாது மலைக்கு சுற்றுலா செல்லலாம். இந்தப் பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சி, படகு சவாரி உள்ளிட்டவை அமைந்துள்ளது.

சம்மர் சுற்றுலா… வேலூரில் இருந்து 1 மணி நேர பயணம்.. 4 ஆயிரம் அடி உயரம்.. த்ரில்லிங்கான அனுபவம்!
கோடை கால சுற்றுலா செல்ல சிறந்த இடம் ஜவ்வாது மலை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Feb 2026 12:15 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை காலம் என்பதால் ஏராளமான பொது மக்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த மாவட்டத்தின் அருகே உள்ள சுற்றுலா தளங்களுக்கே முதலிடம் கொடுப்பார்கள். ஏனென்றால், குறைந்த தூரத்தில், குறைவான நேரத்தில் சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்ப வேண்டும் என்பதற்காகவே. அந்த வகையில், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்டே சுற்றுலா செல்ல விரும்பினால் ஜவ்வாது மலைக்கு செல்லலாம். இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். 262 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலையில் பசுமையான காடுகள், பீமன் நீர்வீழ்ச்சி, காவலூர் வானாய்வு நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

4000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜவ்வாது மலை

சுமார் 3,800 முதல் 4000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கு சுற்றுலா செல்லும் பொது மக்கள் பீமன் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம். மேலும், அந்த அருவியில் மனம் குளிர குளித்து குத்தாட்டம் போடலாம். அதன் அருகே கோமுட்டேரி ஏரி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் அதிகளவு பொது மக்கள் குவிந்து காணப்படுவார்கள். இங்கு செடி, கொடி, மரங்களை கண் குளிர பார்த்து பரவசம் அடையலாம்.

மேலும் படிக்க: Viral Video : ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. வாகன ஓட்டியை அலறவிட்ட மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பசுமையான காடுகளுள் வித்தியாசமான அனுபவம்

மேலும், பசுமையான காடுகள் படர்ந்து வளர்ந்துள்ளதால், அதனுள் சுற்றுலா செல்வது வித்தியாசமான அனுபவத்தை தரும். மேலும், ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கிகளில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் மலையாளி இன மக்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர்.

த்ரில்லிங்கான அனுபவத்துக்கு ஜவ்வாது மலை பயணம்

மேலும், கீழ்வானம் அணையில் நிரம்பி இருக்கும் நீர், படகு சவாரி ஆகியவை சுற்றுலா செல்லும் பொது மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், குது கலத்தையும் அளிக்கும். மேலும், திரில்லிங்கான பயமூட்டும் அனுபவத்தை பெற விரும்பும் சுற்றுலா பயணிகள் வாளியாம்பாறை என்ற இடத்திற்கு ட்ரக்கிங் செல்லலாம். அந்தப் பகுதியில் வாழியர்கள் என்று சொல்லக்கூடிய 3 அடி உயரமே உள்ள குள்ள மனிதர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. இதனை பார்க்க முடியும்.

ஜவ்வாது மலைக்கு எப்படி செல்லலாம்

இந்த ஜவ்வாது மலைக்கு திருவண்ணாமலையில் இருந்து சுமார் 70 முதல் 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலைக்கு சுமார் 2 முதல் 3 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும். இதே போல போளூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மணி நேரத்திலும், வேலூரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மணி நேரத்திலும் அமிர்தி வழியாக ஜவ்வாது மலையை சென்றடையலாம்.

மேலும் படிக்க: Viral Video : வெறும் 5 பேருக்கு ஹோட்டல்.. 70 வயதிலும் அயராத உழைப்பு.. இணையத்தை திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி!