AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை..எந்த வழியாக அமைக்கப்படும்..வழித்தடம் வெளியீடு!

Thoothukudi- Kanyakumari 4 Lane Highway: தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை அமைக்கப்பட உள்ள 4 வழிச்சாலை பணிக்கான வழித்தடம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கு இழப்பீடு வழங்கப்பட்டு பணிகள் தொடங்க இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை..எந்த வழியாக அமைக்கப்படும்..வழித்தடம் வெளியீடு!
தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி 4 வழிசாலை வழித்தடம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Feb 2026 07:16 AM IST

இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 16 வழிச்சாலை, 8 வழிச்சாலை, 4 வழிச்சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னை முதல் தூத்துக்குடி வரை சுமார் 690 கிலோ மீட்டர் தொலைவு வரை 4 வழிச்சாலை திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த திட்டமானது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர்- கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு, தூத்துக்குடி- திருச்செந்தூர்- கன்னியாகுமரி ( NH-32) TTK சாலை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த, சாலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 25 கிராமங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 11 கிராமங்கள் என மொத்தம் குமார் 106.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக 4 வழி சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக சுமார் 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

4 வழிச்சாலை அமைப்பதற்கான வழித்தடம்

இந்த நிலையில், இந்த 4 வழிச்சாலை அமைய உள்ள வழித்தடம் குறித்த தகவலை நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ளது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் இந்த சாலையானது தொடங்கப்பட்டு கட்டாலங்குளம், நட்டாத்தி, சிறுத் தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், சுகந்தலை, சேதுக்கு வாய்த்தான், அங்கமங்கலம், நல்லூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம், மூலக்கரை, நத்தகுளம், கந்தசாமிபுரம், மேல திருச்செந்தூர், கீழ திருச்செந்தூர், குலசை, உடன்குடி, ஆதியா குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, திருப்பணி புத்தன் தருவை ஆகிய கிராமங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?

முக்கிய இடங்களில் உள்ள ரயில்வே கேட்

இதே போல, திருநெல்வேலி மாவட்டத்தில் குட்டம், உவரி, கரைச்சுத்து புதூர், கூடங்குளம், இருக்கன் துறை 1, 2, லெவிஞ்சிகபுரம் வழியாக கருங்குளத்தில் நெல்லை- கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது. இதனிடையே, தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் ஆகிய மூன்று பகுதிகளிலும், இதே போல, நெல்லை சாலையில் குரும்பூர் அருகே நல்லூர் பகுதிகளில் ரயில்வே கேட் உள்ளன. நெல்லை மற்றும் தூத்துக்குடி வழியாக வரும் பக்தர்கள், இந்த ரயில்வே கேட்டுகளை கடந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி

இதில், நல்லூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் மட்டும் மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக நல்லூர் அருகேயுள்ள நாக கன்னியாபுரம் ரயில்வே கேட்டின் மேல் பகுதியிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டு 4 வழிச்சாலை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழித்தடம் குறித்து 21 நாட்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில், 4 வழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வழித்தட பகுதியில் கற்கள் பதிக்கப்பட உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… மருத்துவரிடம் நூதன மோசடி – வசமாக சிக்கிய இருவர்

Follow Us