சென்னையில் ரயில் தண்டவாளத்தை கடத்த முயன்ற 384 பேர் மீது வழக்கு.. பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை!
Cases Filed In Chennai For Crossing Train Tracks | சென்னையில் ரயில் தண்டவாளங்களை கடந்து செல்ல முயன்ற 384 பேர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமன்றி, அவர்களிடம் இருந்து அபராத கட்டணமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, பிப்ரவரி 15 : சென்னையில் (Chennai) ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 384 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிறுத்தங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 384 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் உள்ள எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ரயில்களில் படியில் பயணம் செய்பவர்கள், ரயில்களில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்கள், விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கேரியரின் உச்சத்தை விட்டு வந்தாலும்… உதயநிதி பேச்சால் சர்ச்சை – என்ன நடந்தது?
ஒரு ஆண்டில் 384 பேர் மீது வழக்குப்பதிவு
அந்த வகையில் எழும்பூ ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளனர். அதாவது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எழும்பூர் ரயில் நிலைய பகுதிகளில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 384 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : தவெக கூட்டத்தில் உயிரிழந்த இளைஞர் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 450 அபராதம் வசூல்
அவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 450 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ரயில்வே தண்டவாளங்களை கடப்பது குற்றமாகும். எனவே, பயணிகள் ரயில் நிலையங்களில் ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது விபத்து ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதனை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.