AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… மருத்துவரிடம் நூதன மோசடி – வசமாக சிக்கிய இருவர்

Online Scam : அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்த மருத்துவரிடம் நூதன முறையில் ரூ.5 லட்சம் வரை ஏமாற்றிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… மருத்துவரிடம் நூதன மோசடி – வசமாக சிக்கிய இருவர்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Feb 2026 19:56 PM IST

அரியலூர் , பிப்ரவரி 14 : ஆன்லைன் வர்த்தகம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரியலூர் மாவட்டம் இலந்தைக் கூடம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். பிசியோதெரபி மருத்துவரான இவர் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 2025ல் முகநூலில் ஸ்டாக் மார்கெட் தொடர்பான விளம்பரத்தைப் பார்த்து அவர்களை தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து தன்னை மோதிலால் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர், ராம்தியோ அகர்வால் என்பவர் ஓஸ்வால் என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக ஸ்டாக் மார்கெட் குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறார்.

அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 5 முதல் 20 சதவகிதம் வரை லாபம் சம்பவாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் சங்கர் கணேஷிற்கு சில் ஆன்லைன் லிங்க்குகளையும் அனுப்பியுள்ளனர். அதனை நம்பி தன்னைப் பற்றிய விவரங்களை சங்கர் கணேஷ் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து எக்ஸ்எம்ஓ ஃபோகஸ் பாரம் என்ற வாட்ஸ் குழுவில் அவரை இணைந்துள்ளனர். அதில் ஸ்டாக் மார்கெட் குறித்த தகவல்கள் அவருக்கு மெசேஜ்களாக வந்துள்ளன.

இதையும் படிக்க : நெருங்கும் தேர்தல்.. மீண்டும் பரப்புரை சுற்றுப் பயணத்தை தொடங்கும் இபிஎஸ்.. தேதி அறிவிப்பு

இதனால் சங்கர் கணேஷிற்கு ஆர்வம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மோசடி நபர்கள் கூறியபடி அவர்கள் சொன்ன செயலியை பதிவிறக்கம் செய்து அதில் வங்கி விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அளித்து லாகின் செய்துள்ளார். முதல் கட்டமாக ரூ.5,000 செலுத்தி சில பங்குகளை வாங்கியிருக்கிறார். மேலும் சிறிய தொகைகளை அவ்வப்போது மோசடி நபர்களின் பெயரில் பங்குகளை வாங்கி வந்திருக்கிறார். மொத்தமாக ரூ.5,00,000 அளவுக்கு முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சங்கர் கணேஷிற்கு லாபமாக ரூ.15.50 லட்சம் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மகிழ்ச்சி அடைந்த அவர் மொத்த பணத்தையும் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது செயலியில் இப்போ ஸ்டாக்கில் ரூ.20 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த சங்கர் கணேஷிற்கு சந்தேகம் ஏற்பட்டு அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க : ஒரு ‘டீ’ ரூ.1 மட்டுமே.. காதலர் தினத்தில் ருசிகரம்.. 3 நாட்களுக்கு ஆஃபர்.. எங்கு தெரியுமா?

அவரது புகார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள்து விசாரணையில் ஸ்டாக் மார்கெட் மோசடியில் ஈடுபட்டது திருப்பூரைச் சேர்ந்த அபுதாகீர் மற்றும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் ென தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 3 பேங்க் பாஸ்புக், 10 செக் புக், 10க்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள், 1 லேப்டாப், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us