AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆபாச பேச்சு… சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி

Sivaji Krishnamurthy Sentenced to 3 Years: பிரபல திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு பொது அமைதிக்கும் பங்க விளைவித்தல், ஆளுநர் குறித்து அவதூறு கருத்து உள்ளிட்ட புகார்களின் அடிப்பைடயில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆபாச பேச்சு… சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Feb 2026 21:47 PM IST

சென்னை, பிப்ரவரி 14 : பிரபல திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு பொது அமைதிக்கும் பங்க விளைவித்தல், ஆளுநர் குறித்து அவதூறு கருத்து உள்ளிட்ட புகார்களின் அடிப்பைடயில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜன் 16 அன்று நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது தமிழக ஆளுநர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு எதிர்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து சிவாஜி கிருஷ்ணமூரத்தி மீது ஆபாசமாக பேசுதல், கலகத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தல்…. விஜய் கண்டனம்

இந்த வழக்கு சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு பிப்ரவரி 14, 2026 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், உயர் அதிகாரிகளின் அழுத்தத்திற்கு பயந்து பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் புகார் கொடுக்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் முதல்வர், பாஜக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மீது அநாகரிகமான வார்த்தைகளால் அவதூறு பரப்பும் வகையில் பேசப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்றி ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது ன்றார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றான கலகத்தை தூண்டுவது என்ற குற்றச்சாட்டை அரசு தரப்பு ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. ஆனால் அவர் மீதான மற்ற குற்றச்சாட்டுகள் தகுந்த சாட்சிகளுடன் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது.

இதையும் படிக்க : தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை.. மன்னிப்பு கேட்ட அமித் ஷா..

எனவே அநாகரிகமாக பேசிய வழக்கில் அவருக்கு 3 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்துள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 

Follow Us