Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை.. மன்னிப்பு கேட்ட அமித் ஷா..

Amit Shah speech in karaikal: காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும். அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றி இருந்தது. இது குறித்து வாய்திறக்க மாட்டார்கள். மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாக பதிலடி தரப்பட்டது.

தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை.. மன்னிப்பு கேட்ட அமித் ஷா..
காரைக்காலில் அமித் ஷா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Feb 2026 14:07 PM IST

புதுச்சேரி, பிப்ரவரி 14: உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காரைக்காலில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார். 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவு 11 மணியளவில் அமித்ஷா திருச்சி வந்தார். அங்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் அவர் தங்கினார்.

மேலும் படிக்க: பாஜகவின் புதுமையான பிரசாரம்.. வாசகமே கிடையாது.. வியந்த மக்கள்!!

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

தொடர்ந்து, இன்று காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வரிச்சக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் தரையிறங்கிய அமித்ஷா, திருநள்ளாறு சாலை வழியாக சென்ற நகராட்சி திடலில் 11.30 மணியளவில் பாஜக பொதுக்கூட்டதில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கூடியிருந்தனர். இதையொட்டி, அங்கு 700க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மன்னிப்பு கேட்ட அமித்ஷா:

திருநள்ளாறு சனீஸ்வரர் மற்றும் பத்ரகாளி அம்மனை வணங்கி உரையைத்தொடங்குவதாக குறிப்பிட்ட அமித் ஷா, “உலகின் தொன்மையான தமிழ் மொழியிலே, மிகவும் இனிமையான தமிழ் மொழியிலே என்னால் உரையாற்ற முடியவில்லையே என்பதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, எதிரிகளின் இடத்திற்கே சென்று இந்தியா பதிலடி கொடுத்ததை நினைவுகூர்ந்த அவர், ‘ஆப்பரேஷன் சித்தூர்’ போன்ற துல்லியமான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2 நோக்கங்களுக்காக வந்துள்ளேன்:

பிரதமர் மோடி நாட்டிற்குப் பெருமையை மட்டும் தேடித்தரவில்லை, தேசத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளார் என அவர் புகழாரம் சூட்டினார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு தனக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, முதலாவதாக பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் சமர்ப்பிக்க வந்துள்ளதாகவும், இரண்டாவதாக ‘இந்தியா’ கூட்டணியின் தீய நோக்கங்களை அம்பலப்படுத்தி அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!

காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் தாக்குதல்:

காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும். அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றி இருந்தது. இது குறித்து வாய்திறக்க மாட்டார்கள். மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாக பதிலடி தரப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி முற்றுப்புள்ளி வைத்தார். கடந்த ஐந்தாண்டுகளில் நாம் சட்டம் ஒழுங்கையும் சீர் செய்திருக்கின்றோம். அமைப்புகளையும் மறு கட்டமைப்பு செய்துள்ளோம். அடுத்ததாக நாம் வளர்ச்சி பயணத்திலே அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி முன்னேறும் என்றார்.