Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெருங்கும் தேர்தல்.. மீண்டும் பரப்புரை சுற்றுப் பயணத்தை தொடங்கும் இபிஎஸ்.. தேதி அறிவிப்பு

Eps to start election campaign: முதல் கட்சியாக அதிமுக தங்களது கூட்டணியை இறுதி செய்து வருகிறது. அதன்படி, அதிமுகவுடன், பாஜக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிகட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. கிட்டத்தட்ட இதுவே கூட்டணி இறுதியான நிலைதான்.

நெருங்கும் தேர்தல்.. மீண்டும் பரப்புரை சுற்றுப் பயணத்தை  தொடங்கும் இபிஎஸ்.. தேதி அறிவிப்பு
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Feb 2026 11:30 AM IST

சென்னை, பிப்ரவரி 15: திருவள்ளூர், செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி வரும் பிப்ரவரி 21ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக சார்பில் தேர்தல் பிரசார பயணம் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனிடையே, கூட்டணி பேச்சுவார்த்தை, வாக்காளர் நேர்காணல் உள்ளிட்ட பணிகள் காரணமாக அவரது சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தல்…. விஜய் கண்டனம்

வேகமெடுக்கம் தேர்தல் பணிகள்:

அந்தவகையில், முதல் கட்சியாக அதிமுக தங்களது கூட்டணியை இறுதி செய்து வருகிறது. அதன்படி, அதிமுகவுடன், பாஜக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிகட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. கிட்டத்தட்ட இதுவே கூட்டணி இறுதியான நிலைதான். எனினம், புதிய தமிழகம், ராமதாஸ் தரப்பு பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், கூட்டணியை இறுதி செய்வதில் அக்கட்சியில் இழுபறி நீடிக்கிறது. அதேசமயம், அதிமுக தரப்பில் விருப்பமனு பெறும் பணிகள் நிறைவுற்று, நேர்காணல்களும் நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிகிறது.

இபிஎஸ் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம்:

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட சுற்றுப்பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக வருகிற 21-ந்தேதி முதல் 26ம் தேதி வரை அவர் திருவள்ளூர், செங்கல்பட்டில் சூறாவளி பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

திருவள்ளூர், செங்கல்பட்டில் பிரசாரம்:

அதன்படி 21ம் தேதி திருவள்ளூர் தெற்கு (கட்சி ரீதியான) மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூரில் மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். இதில் ஆவடி, அம்பத்தூர் தொகுதிகள் உள்ளடங்குகின்றன. 22ம் தேதி மாலை 4 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாதவரத்திலும், மாலை 5 மணிக்கு பொன்னேரியிலும் பிரசாரம் செய்கிறார்.25ம் தேதி மாலை 5 மணிக்கு திருவள்ளூர் மத்திய தொகுதிக்கு உட்பட்ட மதுரவாயலில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டப வளாகத்திலும் (மதுரவாயல், பூந்தமல்லி), 26ம் தேதி மாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

இதையும் படிக்க : தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை.. மன்னிப்பு கேட்ட அமித் ஷா..

இதில் தாம்பரம், பல்லாவரம் தொகுதிகள் உள்ளடங்குகின்றன. இந்த பிரசார பயணத்துக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்யவேண்டும். இதில் கட்சியின் மாநில – மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.