Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஃபேஸ்புக் மூலம் சைபர் ஸ்கேம் நடப்பதை சுலபமாக தடுக்கலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா!

Facebook Account Protection Feature | மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் செயலியில் ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பு என்ற புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த அம்சத்தை பயன்படுத்தி ஃபேஸ்புக் கணக்கை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி ஃபேஸ்புக் மூலம் சைபர் ஸ்கேம் நடப்பதை சுலபமாக தடுக்கலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Jan 2026 14:33 PM IST

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக ஊடக செயலி தான் ஃபேஸ்புக் (Facebook). இந்த செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்துகின்றனர். பலருக்கும் இது மிகவும் பிடித்த சமூக ஊடக செயலியாக உள்ளது. ஃபேபுக் செயலி என்னதான் பலருக்கும் மிகவும் பிடித்த செயலியாக இருந்தாலும் அதில் சில பாதுகாப்பு குறைப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் தான், மெட்டா (Meta) நிறுவனம் ஃபேஸ்புக் கணக்குகளை பாதுகாக்க புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம் அதனை பயன்படுத்தி ஃபேஸ்புக் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மெட்டா அறிமுகம் செய்த ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பு

மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் செயலியில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. டிசம்பர் மாத தொடக்கத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு மெயில் அனுப்பியது. அதில், உங்கள் ஃபேஸ்புக் கணக்குக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என கூறியிருந்த அந்த நிறுவனம், பயனர்களை மார்ச் 17 ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் பாதுகாப்பு (Facebook Account Protection) அம்சத்தை அக்டிவேட் செய்யும்படி கூறியுள்ளது. இந்த ஃபேஸ்புக் பாதுகாப்பு அம்சம் பயனர்களை மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாக்க உதவும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Gmail : ஜிமெயிலில் ஸ்பேம் மெயில்களை ரிப்போர்ட் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் பாதுகாப்பை ஆக்டிவேட் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் ஃபேஸ்புக் கணக்கை திறக்க வேண்டும்.
  2. பின்னர் ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ் பக்கமாக கொடுக்கப்பட்டுள்ள ஏரோவை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு செட்டிங்க்ஸ் மற்றும் பிரைவசி (Settings and Privacy) என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு செட்டிங்க்ஸ் (Settings) அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் (Facebook Protect) என்பதை கிளிக் செய்து கெட் ஸ்டாட்டர்ட் (Get Started) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  6. தற்போது உங்களுக்கு வெல்கம் ஸ்கிரீன் (Welcome Screen) தோன்றும்.
  7. அதனை கிளிக் செய்த பிறகு ஃபேஸ்புக் பாதுகாப்பு அம்சம் குறித்த சிறப்பு அம்சங்கள் தோன்றும்.
  8. இப்போது ஃபேஸ்புக் உங்களது கணக்கை முழுவதுமாக சோதனை செய்யும்.
  9. அப்போது உங்கள் கணக்கில் என்ன பாதுகாப்பு அம்சம் குறைவாக உள்ளது. அதனை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தோன்றும்.

அதற்கு ஏற்றார் போல் உங்களது ஃபேஸ்புக் கணக்கின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.