நொடி பொழுதில் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதில்.. வாட்ஸ்அப் செயலியில் நியாய சேது செயலியை அறிமுகம் செய்த மத்திய அரசு!
Nyaya Setu App For Legal Advice | இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் நியாய சேது என்ற செயலியை சட்டம் மற்றும் நீதி துறை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட் வாழ்வில் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை அதிகம் பயன்படுத்தும் நிலையில், அதில் நியாய சேது (Nyaya Setu) என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை (Law and Justice Of India) தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சட்ட அலோசனைகளை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் மெட்டா ஏஐ பயன்படுத்துவதை போல இந்த நியாய சேது மூலம் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அசத்தல் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நியாய சேது என்றால் என்ன?
நியாய சேது என்பது ஆக்ஸ்ட் 2024-ல் மத்திய அரசு தொடங்கிய ஒரு முக்கிய அம்சமாகும். பொதுமக்கள் சட்டம் தொடர்பான விளக்கங்கள் மற்றும் உதவிகளை பெற இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டம் தொடர்பான சேவைகளுக்கு மற்றும் குழப்பங்களுக்கு பொதுமக்கள் எளிதாக தீர்வு காணும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டம் தொடர்பான சேவைகள் மற்றும் விளக்கங்களை பெறுவது பொதுமக்களுக்கு சற்று கடினமாக இருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் செயலியிலே சேவையை மிக எளிதாக இந்த அம்சம் வழங்குகிறது.




இதையும் படிங்க : ரயில் ஒன் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட் புக் செய்தால் 3% தள்ளுபடி.. இந்திய ரயில்வே அசத்தல் அறிவிப்பு!
நியாய சேது செயலியை வாட்ஸ்அப்பில் பயன்படுத்துவது எப்ப்டி?
- நீங்கள் வாட்ஸ்அப் செயலில் நியாய சேது மூலம் ஏதேனும் சட்டம் தொடர்பான தகவல்கள் அல்லது சந்தேகங்களுக்கு விடை தேட விரும்புகிறீர்கள் என்றால் “7217711814” என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
- அந்த எண் Tele – Law என உங்கள்து வாட்ஸ்அப் செயலியில் தோன்றும்.
- அதில் Legal Advice, Legal Information மற்றும் Legal Assistance ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
- முன்னதாக நியாய சேது செயலி உங்களது மொபைல் எண்ணை சரிப்பார்க்க கோரும். அது முடிந்த பிறகு மேற்குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் இருந்து உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து நீங்கள் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலையோ அல்லது விளக்கத்தையோ பெற்றுக்கொள்ளலாம்.