Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gmail : இனி ஜிமெயில் முகவரியை சுலபமாக மாற்றலாம்.. விரைவில் அமலுக்கு வரும் அசத்தல் அம்சம்!

Users Can Actually Change Their Gmail Address | தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான நபர்கள் தங்களது தகவல் பரிமாற்ற தேவைகளுக்காக ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஜிமெயில் கணக்கு குறித்த மிகவும் அட்டகாசமான பல ஆண்டுகளாக எதிர்ப்பார்த்து காத்திருந்த அம்சம் அறிமுகமாக உள்ளது.

Gmail : இனி ஜிமெயில் முகவரியை சுலபமாக மாற்றலாம்.. விரைவில் அமலுக்கு வரும் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Dec 2025 22:27 PM IST

உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகிய செயலிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான செயலி தான் ஜிமெயில் (Gmail). காரணம், வேலை மற்றும் தொழில் சார்ந்த உரையாடல்களுக்கு ஜிமெயில் அதிகம் பயன்படுத்துகிறது. உதாரணமாக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் உரையாட இது முதன்மையாக உள்ளது. மேலும், முக்கியமான தரவுகளை பாதுகாப்பாக ஒருவர் மற்றொருவருடன் பகிர்ந்துக்கொள்ள இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏரளாமான பொதுமக்களின் வாழ்க்கையில் ஜிமெயில் மிக முக்கிய செயலியாக உள்ள நிலையில், அதில் அசத்தலான அம்சம் ஒன்று அறிமுகமாக உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி ஜிமெயில் முகவரியை மாற்றிக்கொள்ளலாம் – விரைவில வரும் அசத்தல் அம்சம்

ஜிமெயில் கணக்கு தொடங்கினால் அந்த முகவரியை காலத்திற்கும் மாற்ற முடியாது. இதுதான் தற்போதைய நடைமுறையாக உள்ளது. உதாரணமாக ஒருவர் 2001 ஆம் ஆண்டு ஒரு ஜிமெயில் முகவரியை 2001 என்று குறிப்பிட்டு உருவாக்குகிறார் என்றால் அவர் காலத்துக்கும் அந்த ஜிமெயில் முகவரியை தான் பயன்படுத்த முடியும். ஏதேனும் அவசரத்திற்கு முகவரியை தொடங்கியவர்கள் முகவரியை மாற்றம் செய்ய முடியாததால் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான் ஜிமெயிலில் பல ஆண்டுகளாக பலரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த அசத்தல் அம்சம் அறிமுகமாக உள்ளது. அதாவது இனி பயனர்கள் தங்களது ஜிமெயில் கணக்குகளை மாற்றம் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் இந்தியாவில் தலைவிரித்தாடிய சைபர் மோசடிகள்.. கோடி கணக்கில் பணத்தை இழந்த மக்கள்!

ஜிமெயில் முகவரியை மாற்ற சில கண்டிஷன்கள்

ஜிமெயில் முகவரியை மாற்ற அனுமதி வழங்கப்பட்டாலும் அதற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன.

  • பயனர்கள் @gmail.com என முடியும் ஜிமெயில் முகவரிகளை மாற்றம் செய்துக்கொள்ளலாம்.
  • அந்த மாற்றம் செய்யப்பட்ட ஜிமெயில் முகவரி ஏற்கனவே உள்ள பழைய முகவரியில் புதிய கணக்காக இணைந்துவிடும்.
  • பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய ஜிமெயில் கணக்கில் அடுத்த 12 மாதங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாது.
  • பழைய கணக்கை பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில் ஏற்கனவே உள்ள பழைய கணக்கை பயன்படுத்தி 12 மாதங்களுக்குள்ளாக மேலும் ஒரு புதிய கணக்கை தொடங்க முடியாது.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஜிமெயில் முகவரியை மாற்றுவதற்கான முக்கிய விதிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.