AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாக்க இந்த விஷயங்களை ட்ரை பண்ணுங்க!

Protect Your Smartphone Screen From Damage | ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாக்க உதவும் சில முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாக்க இந்த விஷயங்களை ட்ரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Feb 2026 22:40 PM IST

ஸ்மார்ட்போன்கள் (Smartphones) மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாப்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட்போன் கீழே விழுந்து அதன் ஸ்கிரீன் சேதமாகிவிட்டால் அதற்கு போனின் பாதி விலைக்கு செலவு செய்ய வேண்டும். இந்த நிலையில் தான் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாப்பது மிகவும் அவசியமானதாக உள்ளது. அதற்காக எந்த விதமான ஸ்கிரீன் ப்ரொடெக்டரை (Screen Protector) பயன்படுத்துவது என தெரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாக்க எந்த ப்ரொடெக்டரை பயன்படுத்துவது சரியானதாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டெம்பர்டு கிளாஸ்

தற்போது பெரும்பாலான மக்கள் தங்களது ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாக்க பயன்படுத்தும் மிக முக்கிய அம்சமாக இது உள்ளது. சாதாரண கண்ணாடியை அதிக வெப்பப்படுத்தி உருவாக்கப்படுவதால் இது மிகவும் வலிமையானதாக உள்ளது. இந்த டெம்பர்டு கிளாஸை போடுவதன் மூலம் போனின் ஸ்கிரீன் கீரல்கள் மற்றும் கீழே விழுந்தால் உடையாமல் பாதுகாக்க உதவுகிறது.

இதையும் படிங்க : ஆமை வேகத்தில் இருக்கும் குரோமை சூப்பர் ஃபாஸ்ட் ஆக மாற்றலாம்.. எப்படி?

ஹைட்ரோஜெல் ப்ரொடெக்டர்

வளைவான திரைகளை கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இந்த ஹைட்ரோஜெல் ப்ரொடெக்டர் மிகுந்த பாதுகாப்பை வழங்குகிறது. இது மிகவும் மென்மையான ரப்பர் போன்ற தன்மையை கொண்டது. இதில் செல்ஃப் ஹீலிங் அம்சம் உள்ளதன் காரணமாக கீரல்கள் விழுந்தால் அவை தானாகே சரியாகிவிடும். திரையின் வளைவுகளிலும் இது மிக கச்சிதமாக பொருந்தும்.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் விரைவில் வரவுள்ள “Group Chat History” அம்சம்.. இனி இந்த கவலை இல்லை!

பிளாஸ்டிக் ஸ்கிரீன் கார்டு

ஸ்கிரீனுக்கு பாதுகாப்பு போட வேண்டும் அதே சமயம் விலை குறைவாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு. இது ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் மீது மெல்லிய பிளாஸ்டிக் படலமாக இருக்கும். இது மிகவும் மெல்லியது என்பதால் ஸ்கிரீனில் ஒட்டி இருப்பதே தெரியாது. இது பயன்படுத்துவதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும்.