AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WhatsApp : வாட்ஸ்அப்பில் விரைவில் வரவுள்ள “Group Chat History” அம்சம்.. இனி இந்த கவலை இல்லை!

Group Chat History Feature In WhatsApp | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில், அதில் அவ்வப்போது பல அட்டகாசமான அம்சங்கள் வெளியாகும். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப்பில் விரைவில் வரவுள்ள “Group Chat History” அம்சம்.. இனி இந்த கவலை இல்லை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Feb 2026 14:20 PM IST

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. ஏராளமான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தும் நிலையில், பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல புதிய புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், “குரூப் சாட் ஹிஸ்டரி” (Group Chat History) என்ற அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் மிக முக்கிய அம்சமாக இருக்கும் குழு உரையாடல்

வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்தி, ஆடியோ கால், வீடியோ கால் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தான் இந்த குழு உரையாடல். அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் உரையாடல் நிகழ்த்த இந்த குழு உரையாடல் பயன்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நண்பர்கள் மத்தியில் இந்த குழு உரையாடல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குழு உரையாடலை ஏராளமான பயனர்கள் பயன்படுத்தும் நிலையில், அது குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : ஏஐ முழுமையாக வளர்ச்சியடைந்தால் நம் வேலைகளுக்கு என்ன நடக்கும்? நாம் என்ன செய்ய வேண்டும்?

விரைவில் வரவுள்ள குரூப் சாட் ஹிஸ்டரி அம்சம்

வாட்ஸ்அப்பில் ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்றால் யாரேனும் ஒருவர் குழுவில் யாரெல்லாம் இணைக்கப்பட வேண்டுமோ அவர்களது பெயர்களை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அந்த குரூப் உருவாகும். இவ்வாறு குரூப் உருவாக்கப்படும் பட்சத்தில் யாரையேனும் குழுவில் இணைக்க தவற வாய்ப்பு உள்ளது. அவ்வாறு குழு உரையாடலை தொடங்கிய பிறகு விடுபட்ட நபரை இணைக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு அதற்கு முன்பு பேசிய எதுவும் உரையாடலில் இருக்காது. இந்த சிக்கலை சரிசெய்ய தான் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போனில் தேங்கி கிடக்கும் ஜங்க் டேட்டா.. கிளியர் செய்வது எப்படி?

100 உரையாடல்களை வரை அனுப்ப முடியும்

அதவாது வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் சாட் ஹிஸ்டரி என்ற அம்சத்தை தான் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் குழுவில் தாமதாம இணைக்கப்பட்ட நபருக்கு அந்த குழுவின் அட்மின் சுமார் 100 குறுஞ்செய்திகள் வரை ஷேர் செய்ய முடியும். இதன் மூலம் தாமதமாக இணைக்கப்பட்ட நபர், தான் குழுவில் இணைவதற்கு முன்பாக என்ன நடைபெற்றது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள முடியும்.