AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வார்த்தைகளை ஸ்டிக்கர்களாக மாற்றலாம்.. வாட்ஸ் அப்பில் வந்த அசத்தல் அம்சம்!

Turn Words Into Stickers In WhatsApp | உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரதான செயலியாக மெட்டாவின் வாட்ஸ்அப் செயலி உள்ளது. இந்த நிலையில், அதில் உள்ள வார்த்தைகளை ஸ்டிக்கர்களாக மாற்றும் சிறப்பு அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வார்த்தைகளை ஸ்டிக்கர்களாக மாற்றலாம்.. வாட்ஸ் அப்பில் வந்த அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Feb 2026 17:44 PM IST

பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் மெட்டாவின் வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறைந்தது மாதத்திற்கு ஒரு புதிய அம்சத்தையாவது அறிமுகம் செய்துவிடுகிறது. அந்த வகையில், தற்போது ஒரு அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. Turn Your Words Into Stickers என்ற அம்சத்தை தான் அது அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்டிக்கர்கள் குறித்து இனி கவலை இல்லை

முன்பெல்லாம் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என்றால் வேறு ஏதேனும் செயலிகளில் ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை பதிவிறக்கம் செய்து தான் வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும். இல்லை என்றால் நண்பர்களிடம் அவர்கள் வைத்திருக்கும் ஸ்டிக்கர்களை அனுப்ப கூறி அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் அசத்தல் அம்சத்தை தான் வாட்ஸ்அப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இனி எழுத்துக்களையே ஸ்டிக்கர்களாக மாற்ற முடியும்.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் விரைவில் வரவுள்ள “Group Chat History” அம்சம்.. இனி இந்த கவலை இல்லை!

வாட்ஸ்அப்பில் எழுத்துக்களை ஸ்டிக்கர்களாக மாற்றலாம் – எப்படி?

  1. அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு சாட் (Chat) செய்யும் இடத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதற்கு கீழ் ஸ்டிக்கர் ஆப்ஷன் தோன்றும்.
  4. அந்த ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள சர்ச் (Search) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அதனை கிளிக் செய்த பிறகு உங்களுக்கு தேவையான ஸ்டிக்கர் தொடர்பான வார்த்தைகளை பதிவிட வேண்டும்.
  6. உதாரணமாக யாருக்கேனும் பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறீர்கள் என்றால் Happy Birthday என டைப் செய்ய வேண்டும்.
  7. அவ்வாறு நீங்கள் தேடும் வார்த்தைகள் தொடர்பான நூற்றுக்கணக்கான ஸ்டிக்கர்கள் உங்களுக்கு தோன்றும்.
  8. அதில் உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை நீங்கள் தேர்வு செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?.. ஆஸ்திரேலியா மாடலை அறிமுகம் செய்யும் இந்திய அரசு?

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி வார்த்தைகளை ஸ்டிக்கர்களாக மாற்றி உங்கள் உரையாடல்களை மேம்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.