ரயில் ஒன் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட் புக் செய்தால் 3% தள்ளுபடி.. இந்திய ரயில்வே அசத்தல் அறிவிப்பு!
3 Percentage Discount In Railone App | ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர்கள், எந்த விதமான டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் அவர்களுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் ஒன் செயலியில் (Rail One App) முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் முன்பதிவு (Train Ticket Pre Booking) செய்யும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே (Indian Railway) அசத்தல் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது இனி ரயில் ஒன் செயலியில் முன்பதிவு டிக்கெட் புக் செய்யும்போது எந்த வகையான டிஜிட்டல் பேமெண்ட் தளத்தை (Digital Payment Platforms) பயன்படுத்தி பணம் செலுத்தினாலும் 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரயில் ஒன் செயலியில் இந்திய ரயில்வே அறிவித்துள்ள இந்த சிறப்பு தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 சதவீதம் தள்ளுபடி
தற்போதைய நிலவரப்படி ரயில் ஒன் செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது ரயில்வே வேலட்டில் இருந்து பணம் செலுத்தினால் மட்டுமே 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இதில் தான் தற்போது இந்திய ரயில்வே முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது, இனி ரயில் ஒன் செயலியில் பிற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 ஏஐ அம்சங்கள்!




குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 14, 2026 முதல் ஜூலை 14, 2026 வரை இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சலுகை அமலில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் ஏற்கனவே அமலில் இருந்த ரயில் ஒன் செயலி வெலட்டில் இருந்து டிக்கெட் கட்டணம் செலுத்தினால் அளிக்கப்படும் 3 சதவீத சலுகையும் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பயனர்கள் இந்த இரண்டு முறைகளையும் பயன்படுத்தி தள்ளுபடி பெற முடியும்.
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் இந்தியாவில் தலைவிரித்தாடிய சைபர் மோசடிகள்.. கோடி கணக்கில் பணத்தை இழந்த மக்கள்!
ரயில் ஒன் செயலியை தவிர வேறு எந்த செயலியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், இந்த தள்ளுபடி வழங்கப்படாது ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.