Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender 2025 : 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 ஏஐ அம்சங்கள்!

Top 10 Searched AI Features In Google In 2025 | பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் கூகுளில் தான் தேடுவார்கள். இந்த நிலையில், கூகுளில் 2025 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட கூகுள் அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Year Ender 2025 : 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 ஏஐ அம்சங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Dec 2025 14:07 PM IST

சமூக ஊடக செயலிகள் மூலம் எந்த ஒரு விஷயம் என்றாலும் அது மிக விரைவாக வைரலாகிவிடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பல்வேறு விஷயங்கள் இணையத்தில் வைரலான நிலையில், சில மாதங்கள் அவை சமூக ஊடகங்களை ஆட்சி செய்தன. 2025 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் (AI – Artificial Intelligence) சில இணையத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. ஒவ்வொரு அம்சமும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து பலரும் அந்த அம்சங்களை பயன்படுத்த தொடங்கினர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு மக்கள் செயற்கை நுண்ணறிவு அம்சம் குறித்து கூகுளில் (Google) என்ன என்ன தேடியுள்ளார்கள் என்பது குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஏஐ அம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு அம்சம் நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஒவ்வொரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படும்போது அது மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது. அவ்வாறு 2025-ல் மக்களை மிகுவம் ஆச்சர்யப்படுத்திய சில அம்சங்கள் குறித்த கூகுளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கூகுள் ஜெமினி

சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினி உள்ளிட்டவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்களாக உள்ளன. பலரும் இந்த அம்சங்களை பயன்படுத்திய நிலையில், 2025-ல் பலரும் கூகுள் ஜெமினியை (Google Gemini) தான் கூகுளில் அதிக  தேடியுள்ளனர். இதன் காரணமாக கூகுள் பட்டியலில் கூகுள் ஜெமினி முதலிடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க : புகைப்படங்கள், வீடியோக்கள் ஏஐ ஆ?.. கூகுள் ஜெமினி மூலம் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்!

ஜெமினி ஏஐ போட்டோ

கூகுள் ஜெமினியில் கேள்விகளுக்கு பதில் தெரிந்துக்கொள்வது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், கூகுள் ஜெமினியின் ஏஐ போட்டோ (Gemini AI Photo) அம்சத்தை தான் பலரும் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக அது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

க்ரோக்

க்ரோக் (Grok) என்பது உலக பணக்காரர் எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஆகும். சாட்ஜிபிடி, ஜெமினியை போலவே இதிலும் பல விதமான சேவைகளை பெற முடியும். ஏராளமான மக்கள் இதனை அதிகம் பயன்படுத்தும் நிலையில், இது பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

டீப்சீக்

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களில் ஒன்றுதான் இந்த டீப்சீக் (Deepseek). இதனை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு சேவைகளை பெற முடியும். இதனை பலரும் தங்களது அன்றாட வாழ்வில் அதிக பயன்படுத்தும் நிலையில், கூகுள் பட்டியலில் இது நான்காவது இடம் பிடித்துள்ளது.

பிரிப்லெக்சிட்டி

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அறிமுகம் செய்த செயற்கை நுண்ணறிவு அம்சம் தான் இந்த பிரிப்லெக்சிட்டி (Perplexity). இதனை இந்தியாவில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது அனறாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில், இது கூகுள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் சமூக வலைத்தளங்களை ஆட்சி செய்த ஏஐ டிரெண்டுகள்!

கூகுள் ஏஐ ஸ்டுடியோ

வெப்பை மையப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அம்சம் தான் இந்த கூகுள் ஏஐ ஸ்டுடியோ (Google AI Studio). இதில் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களில் பெறுவதை போல பல அட்டகாசமான செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பெற முடியும். இது கூகுள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

சாட்ஜிபிடி

2025 ஆம் ஆண்டு இணையத்தை கலக்கிய ஒரு அம்சம் தான் இந்த சாட்ஜிபிடி. ஏராளமான மக்கள் இந்த சாட்ஜிபிடி (ChatGPT) அம்சத்தை தங்களது பணி, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இது கூகுள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

சாட்ஜிபிடி ஜிப்லி ஆர்ட்

2025-ல் பல ஏஐ டிரெண்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தன. அந்த வகையில், ஜிப்லி ஆர்ட்டும் (Ghibli Art) மிக பிரபலமாக இருந்தது. பலரும் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்களது புகைப்படங்களை எடிட் செய்து சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இது மிகவும் பிரபலமாக இருந்த நிலையில், கூகுள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான அட்டகாசமான ஸ்பீக்கர்கள்.. பட்டியல் இதோ!

ஃப்ளோ

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த ஒரு அட்டகாசமான செயற்கை நுண்ணறிவு அம்சம் தான் இந்த ஃப்ளோ (Flow). இதனை பயன்படுத்தி ஏஐ திரைப்படங்களை உருவாக்க முடியும். இதனை பலரும் பயன்படுத்தும் நிலையில், கூகுள் பட்டியலில் இது ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

ஜிப்லி ஸ்டைல் இமேஜ் ஜெனரேட்டர்

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள கணக்குகளில் 50 சதவீத கணக்குகளிலாவது இந்த ஜிப்லி ஸ்டைல் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். பலரும் இதனை பயன்படுத்திய நிலையில், இந்த ஜிப்லி ஸ்டைல் இமேஜ் ஜெனரேட்டர் (Ghibli Style Image Generator) கூகுள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.