அமெரிக்காவின் வெளிநாட்டு மாணவர் விசாவில் வழங்கப்படும் ஒப்ஷனல் பிராக்டிக்கல் டிரெயினிங் திட்டத்தை தவறாக பயன்படுத்தி போலி நிறுவனங்களில் வேலை செய்து வந்த சுமார் பத்தாயிரம் பேரை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஏராளமான இந்திய மாணவர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.