வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பவர்களை தெரிந்துகொள்ள புதிய வசதி – பிரைவசி பாதிக்குமா?
WhatsApp Contacts Hub : பொதுவாக வாட்ஸ்அப்பில் ஒருவர் ஆன்லைனில் இருக்கிறா என தெரிந்துகொள்ள அவரது சாட்டை திறக்க வேண்டும். இந்த நிலையில், இனி ஒருவரின் சாட்டை திறக்காமலேயே, காண்டாக்டில் யார் தற்போது ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை நேரடியாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் தற்போது பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி இனி ஒருவரின் சாட்டை திறக்காமலேயே, காண்டாக்டில் யார் தற்போது ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை நேரடியாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பீட்டா வெர்ஷன்களில் சோதனை செய்யப்பட்டுவருகிறது. இது பயனர்களின் பிரைவசியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பவர்களை தெரிந்துகொள்ள புதிய வசதி
பொதுவாக வாட்ஸ்அப்பில் ஒருவர் ஆன்லைனில் இருக்கிறா என தெரிந்துகொள்ள அவரது சாட்டை திறக்க வேண்டும். அவர் ஆன்லைனில் இருந்தால் ஆன்லைன் என காட்டும். இல்லையென்றால் கடைசியாக ஆன்லைனில் இருந்த நேரத்தை Last Seen என காட்டும். இதனால் யார் தற்போது ஆன்லைனில் ஆக்டிவாக இருக்கிறார்கள் என்பதை அறிய அவர்களது சாட்டை திறந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
இதையும் படிக்க : எரிபொருள் விலை உயர்வு – ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த எலக்ட்ரிக் கார்கள் – உங்கள் சாய்ஸ் எது?




இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்அப் தற்போது புதிய காண்டாக்ட் ஹப் (Contacts Hub) என்ற பகுதியை உருவாக்கியுள்ளது. இந்த பகுதியில் ஆன்லைனில் இருக்கும் நபர்களின் காண்டாக்ட், சமீபத்தில் ஆக்டிவாக இருந்தவர்கள், மற்றும் விருப்பமான காண்டாக்ட்ஸ் ஆகியவற்றை ஒரே இடத்தில் காண முடியும். இதனால் சாட்டை திறக்காமல் ஒருவருடன் பேசலாமா என தெரிந்துகொண்டு சாட் செய்ய முடியும். அதாவது அவசர காலங்களில் ஆன்லைனில் இருக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்க வசதியாக இருக்கும். ஆன்லைனில் இருப்பதை குறிக்க ஒருவரின் பெயருக்கு அருகில் கிரீன் டாட் காட்டப்படும்.
Online Contacts-க்கு Green Dot
மேலும் Search வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. காண்டாக்டில் உள்ளவர்களை பெயர் மூலம் தேட முடியும். ஒருவரின் போன் நம்பரை சேர்க்க முடியும். மேலும் ஒருவரது வாட்ஸ்அப் கியூஆர் மூலம் ஸ்கேன் செய்து காண்டாக்டில் அவரை சேர்க்க முடியும். இது போன்ற வசதிகளும் கூடுதலாக வருகிறது.
இதையும் படிக்க : அதிகரிக்கும் மால்வேர் தாக்குதல்கள் – ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆண்டி வைரஸ் அவசியமா?
இந்த புதிய வசதி வந்தாலும், தற்போதைய பிரைவசி செட்டிங்ஸ் பகுதியில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. அதாவது ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்தவர்களது பெயர்கள் தெரியாது. மேலும் ஒருவர் லாஸ்ட் சீன் அம்சத்தை மறைத்திருந்தால் அதுவும் காட்டப்படாது. அதாவது பிரைவசி விரும்புகிறவர்களுக்கு இதனால் எந்த பிரச்னையும் இருக்காது.
தற்போது இது டெஸ்டிங் நிலையிலேயே இருக்கிறது. முறையான சோதனைகள் முடிந்த பிறகு வருங்காலத்தில் அப்டேட்களில் புதிய வசதிகள் அனைத்து பயனர்களுக்கு வெலியிடப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த புதிய அம்சம் மூலம் வாட்ஸ்அப் மேலும் வசதியானதாக மாறும் என எதிர்பார்க்க்படுகிறது.