AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எரிபொருள் விலை உயர்வு – ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த எலக்ட்ரிக் கார்கள் – உங்கள் சாய்ஸ் எது?

Best Affordable Electric Cars : சமீபத்தில் மீண்டும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட நிலையில் பலரும் எலக்ட்ரிக் கார்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த கட்டுரையில் இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் மக்கள் அதிகம் தேர்வு செய்யும் சிறந்த எலக்ட்ரிக் கார்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எரிபொருள் விலை உயர்வு – ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த எலக்ட்ரிக் கார்கள் – உங்கள் சாய்ஸ் எது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 May 2026 20:05 PM IST

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மீண்டும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட நிலையில் பலரும் எலக்ட்ரிக் கார்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், 10 லட்சம் ரூபாய்க்குள் வாங்கக்கூடிய விலை குறைவான எலக்ட்ரிக் கார்களுக்கான தேடல் அதிகரித்துள்ளது. இந்த கட்டுரையில் இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த எலக்ட்ரிக் கார்கள் குறித்து பார்க்கலாம்.

Tata Punch EV

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பஞ்ச் எலக்ட்ரிக் கார் தற்போது இந்தியாவில் அதிக கவனம் பெற்றுள்ள எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.9.69 லட்சம் என கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் 30 என்ற மாடலில் 30kwh பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 375 கிலோ மீட்டர் வரை செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில் 275 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த காரில் 65kw எலக்ட்ரிக் மோட்டார். 154nm டார்க்,, 366 லிட்டர் பூட் ஸ்பேஸ், 195mm கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : குழந்தை பிறப்பு விகிதம் சரிவை சந்திக்க முக்கிய காரணியாக உள்ள ஸ்மார்ட்போன்.. ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!

Tata Tiago EV

இந்தியாவில் 10 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் ஒரே எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் டாடா டியாகோ எலக்ட்ரிக் கார். இதன் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் என கூறப்படுகிறது. இதில் 19.2kwh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டார் 45kw பவர், 110Nm டார்க் வழங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 223 கி.மீ வரை செல்லும் என கூறப்பட்டாலும் நடைமுறையில் சுமார் 168 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்புற பயணங்களுக்கு இந்த கார் ஏற்றதாக பார்க்கப்படுகிறது.

MG Comet EV

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எம்ஜி கோமட் எலக்ட்ரிக் கார் தற்போது இந்தியாவின் விலை குறைந்த எலக்ட்ரிக் கார் என கூறப்படுகிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 7.62 லட்சம் என கூறப்படுகிறது. இந்த காரில் 17.3kwh பேட்டரியுடன் கிடைக்கிறது. இந்த காரில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கி.மீ வரை செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் 30.9W பவர், 110Nm டார்க் வழங்கப்படுகிறது. மேலும் பேட்டரி ரெண்டல் திட்டத்துடன் கிடைக்கிறது. ஆனால் இந்த காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கிடையாது. மேலும் ஸ்லோ ஏசி சார்ஜர் முறையில் மட்டும் சார்ஜ் செய்ய முடியும்.

இதையும் படிக்க :  பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் – தடுக்க உதவும் யூடியூபின் ஏஐ தொழில்நுட்பம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குறைந்த விலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசு மானியம் போன்ற காரணங்களால் மக்களுக்கு எலக்ட்ரிக் கார்கள் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us