வயர்லஸ் சார்ஜிங் ஆபத்தானதா? உண்மை என்ன? விவரம் இதோ
Wired Charging Vs Wireless Charging : வீடுகள், அலுவலகங்கள், கார்கள் மட்டுமல்லாமல் தற்போது ஃபர்னிச்சர்களிலும் கூட வயர்லஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு வயர்லஸ் சார்ஜிங் பயன்படுத்துவது மொபைல் பேட்டரியின் செயல்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் வயர்லஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் பயனர்களிடையே வேகமாக பிரபலமாகி வருகிறது. வீடுகள், அலுவலகங்கள், கார்கள் மட்டுமல்லாமல் தற்போது சில சோபா போன்ற ஃபர்னிச்சர்களிலும் கூட வயர்லஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சார்ஜிங் கேபிள் பயன்படுத்தாமல், மொபைலை சார்ஜிங் பேட் மீது வைத்தாலே சார்ஜ் ஆகும் இந்த தொழில்நுட்பம் பலருக்கும் வசதியாக உள்ளது. ஆனால், நீண்ட காலத்திற்கு வயர்லஸ் சார்ஜிங் பயன்படுத்துவது மொபைல் பேட்டரியின் செயல்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
வயர்லஸ் சார்ஜிங் பாதுகாப்பானதா?
இந்த நலையில் , வயர்லஸ் சார்ஜிங் முழுமையாக ஆபத்தானது இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நவீன ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் வயர்லஸ் சார்ஜிங்கை தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தினமும் தொடர்ந்து வயர்லஸ் சார்ஜிங்கை பயன்படுத்துவது பேட்டரியின் செயல்திறனை குறைக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
இதையும் படிக்க : உங்கள் போன் காணாமல் போனால் உடனே செய்ய வேண்டிய 4 விஷயங்கள்




வயர்லஸ் சார்ஜரில் இருக்கும் டிரான்ஸ்மிட்டர் காயில், ஆல்டர்நேட்டிங்க கரண்ட் மூலம் மேக்னெட்டிக் ஃபீல்டை உருவாக்குகிறது. பின்னர் மொபைலுக்குள் இருக்கும் ரிசீவர் காயிலை அந்த பவரரை டைரக்ட் கரண்ட்டாக மாற்றி பேட்டரிக்கு அனுப்புகிறது.
இந்த செயல்முறையில் அனைத்து மின்சாரமும் பேட்டரிக்க்கு செல்லாது. இதனால் வயர்லஸ் சார்ஜிங்கின் போது போன் அதிகமாக சூடாகும். சாதாரண சார்ஜரில் கேபிள் மூலம் சார்ஜ் செய்யும் 5 சதவிகிதம் வரை மட்டுமே எனர்ஜி வீணாகும். இதுவே வயர்லஸ் சார்ஜரில் 20 முதல் 30 சதவிகிதம வரை எனர்ஜி வீணாகிறது. இதுவே வயர்லஸ் சார்ஜிங்கின் போது போன் அதிக வெப்பமடைகிறது.
வயர்லஸ் சார்ஜிங்கில் பேட்டரியின் காலம் மெதுவாக பாதிப்படையக் கூடும். இதனால் வயர்லஸ் சார்ஜிங்கை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எப்போழுதும் கேபிள் மூலம் சார்ஜ் செய்வதே சிறந்தது எனவும் அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிக்க : கார்களின் மூன்றாவது கண்ணாக செயல்படும் டேஷ்கேம்.. முக்கியத்துவம் என்ன?
வயர்லஸ் சார்ஜிங் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
தரமான வயர்லஸ் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சார்ஜிங் செய்யும் போது கேம் விளையாடுவது, தொடர்ந்து வீடியோ பார்ப்பது கூடாது. மொபைல் கவரை கழற்றி வைத்து சார்ஜ் செய்வது நல்லது. பேட்டரியின் பவர் 80 சதவிகிதம் வரும் வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.
மொபைல் பேட்டரி நீண்ட நாட்கள் வர ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. 100 சதவிகிதம் முழுமையான சார்ஜிங்கோ அல்லது 0 சதவிகிதம் சார்ஜ் குறையும் வரையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.