AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி 20%-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்!

Smartphone Battery Charging Tips | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போனை எப்படி முறையாக சார்ஜ் செய்வது, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன, அதனை சரிசெய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி 20%-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Apr 2026 00:19 AM IST

தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்திகின்றனர். அதாவது, பெரும்பாலானவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இத்தகைய மிக முக்கிய செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில், பலருக்கும் தெரியாதது தான் ஸ்மார்ட்போனை எந்த அளவுக்கு சார்ஜ் செய்வது என்பது தான். இந்த நிலையில், ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சார்ஜ் செய்வது ஆபத்தானதா அல்லது பாதுகாப்பானதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சார்ஜ் போடுவது ஆபத்து

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் தங்களது ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சார்ஜ் செய்வர். அவ்வாறு 100 சதவீதம் சார்ஜ் செய்தால் தங்களது ஸ்மார்ட்போனில் பல மணி நேரம் சார்ஜ் நீடிக்கும் என அவர்கள் அத்தகைய செயல்களை செய்வர். ஆனால் அது உண்மை இல்லை. ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போனின் பேட்டரியை சீக்கரமே வீணாக்கிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போனில் எரியும் சிறிய பச்சை லைட்.. ஆபத்தா?.. உண்மை என்ன?

ஸ்மார்ட்போனை எப்படி சார்ஜ் செய்வது?

ஸ்மார்ட்போனை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சார்ஜ் செய்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறான ஒன்று. காரணம், முறையாக ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யாவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் சீக்கிரமே முடிந்திவிடும். இந்த நிலையில் தான் ஸ்மார்ட்போனை எப்படி சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில குறிப்புகளை வழங்குகின்றனர்.

இதையும் படிங்க : ஏஐக்கான செலவு மனிதர்களை விட அதிகமா? சிக்கலில் ஐடி நிறுவனங்கள்

20 சதவீதத்திற்கு குறையாமல் பார்த்துக்கொள்ள வெண்டும்

அதாவது உங்களது ஸ்மார்ட்போனில் சார்ஜ் 20 சதவீதத்திற்கும் கீழ் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதேபோல, நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் அது 100 சதவீதம் வரை செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகப்படியாக ஸ்மார்ட்போனை 90 சதவீதம் வரை சார்ஜ் செய்வது பாதுகாப்பானதாக இருக்கும். இதுவே நீங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட்போனை 0 சதவீததில் இருந்து சார்ஜ் செய்யக்கூடாது.

ஒருவேளை 0 சதவீதத்தில் இருந்து சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் ஆயுட்காலம் சீக்கிரமே குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us