AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்மார்ட்போனில் எரியும் சிறிய பச்சை லைட்.. ஆபத்தா?.. உண்மை என்ன?

Green Light In Smartphone | ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள் உள்ளது. இந்த நிலையில், அதில் உள்ள சிறிய பச்சை லைட் எதற்காக உள்ளது என பலருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் இருக்கும் பச்சை லைட்டுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனில் எரியும் சிறிய பச்சை லைட்.. ஆபத்தா?.. உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Apr 2026 23:47 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாத மனிதர்களையே பார்க்க முடியாது. அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். பலரும் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தினாலும், அதில் உள்ள சில முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளாமலே உள்ளனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் மேலே எரியும் சிறிய பச்சை நிற லைட் (Green Colour Light) எதற்காக எரிகிறது, அதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனில் எரியும் பச்சை நிற லைட் – காரணம் என்ன?

ஸ்மார்ட்போன் திரையில் மே பகுதியில், வழக்கமாக பேட்டரி குறியீடு உள்ளிட்டவற்றுக்கு அருகில் பச்சை நிற புள்ளி போன்ற லைட் ஒன்றி எரியும். இதனை பார்த்த உடன் சிலர் ஏதேனும் சிக்கலோ என அச்சப்படுவர். ஆனால், அது பயனர்களின் பாதுகாப்புக்கான ஒரு அம்சம் தான். அதாவது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க அறிமுகம் செய்த அம்சமாகும். இந்த பச்சை நிற புள்ளி பொதுவாக இரண்டு விஷயங்களை குறிக்கிறது. அதன் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப் டிசைனில் மிகப்பெரிய அப்டேட் – என்னென்ன மாற்றங்கள் வரப்போது?

பச்சை நிற லைட் கூறும் இரண்டு முக்கிய விஷயங்கள்

இந்த பச்சை நிற லைட் கேமரா பயன்பாடு, மைக்ரோபோன் பயன்பாடு என இரண்டு முக்கியமான விஷயங்களை உணர்த்துகிறது.

கேமரா பயன்பாடு

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கும்போது, வீடியோ எடுக்கும்போது மற்றும் வீடியோ கால் பேசும்போது இந்த பச்சை நிற லைட் எரியும்.

மைக்ரோபோன் பயன்பாடு

நீங்கள் ஸ்மார்ட்போனில் பேசும்போது, வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது, கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) போன்ற வசதிகளை பயன்படுத்தும்போது இது எரியும்.

இதையும் படிங்க : பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜர் தானாகவே துண்டிக்கப்படும் – வந்தாச்சு புது சார்ஜர் !

அதாவது உங்களது ஸ்மார்ட்போனில் கேமரா மற்றும் மைக்ரோபோன் செயல்பாட்டில் உள்ளது என்பதை உணர்த்துவது தான் இதன் முக்கியத்துவமாக உள்ளது. இதில் என்ன சிறப்பு என நினைக்கலாம். நீங்கள் கேமராவை அல்லது மைக்ரோபோனை பயன்படுத்தாதபோது இந்த பச்சை நிற லைட் எரியும் பட்சத்தில் உங்களது கேமரா மற்றும் மைக்ரோபோனை யாரோ பயன்படுத்துகின்றனர் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us