பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜர் தானாகவே துண்டிக்கப்படும் – வந்தாச்சு புது சார்ஜர் !
Auto Ejection Charger : ஃபோன் சார்ஜ் ஆன பிறகும் சார்ஜருடன் கணெக்ட் ஆன நிலையிலேயே இருப்பது சாதாரணமாக நடக்கும் ஒன்று. இதனால், சார்ஜர் அதிக வெப்பமடைந்து, ஃபோன் அல்லது சார்ஜருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் போன் முழுமையாக சார்ஜ் ஆனதும் தானாகவே துண்டிக்கும் சார்ஜர் அறிமுகமாகியுள்ளது.
அதிக நேரம் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதால், ஃபோன் பேட்டரி சேதமடையும் என்பதால் பலர் தங்கள் போன்களை இரவு முழுவதும் சார்ஜ் செய்வதில்லை. போனின் மதர்போர்டு உள்ளிட்டவை சேதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க ஒரு சீன நிறுவனம் ஒரு புதிய அமைப்பைக் கொண்டு வந்துள்ளது. குவாஜியா (Kuajia) என்ற சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஆட்டோ எஜெக்ட் மொபைல் சார்ஜரை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. பேட்டரி 100 சதவீதம் சார்ஜ் ஆனதும், இந்த அமைப்பு ஸ்மார்ட்போனின் சாக்கெட்டிலிருந்து சார்ஜரைத் தானாகவே அகற்றிவிடும். இதற்காக, சார்ஜரில் ஒரு ஸ்பிரிங் மற்றும் ஒரு மின்காந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஃபோன் சார்ஜ் ஆன பிறகும் சார்ஜருடன் கணெக்ட் ஆன நிலையிலேயே இருப்பது சாதாரணமாக நடக்கும் ஒன்று. இதனால், சார்ஜர் அதிக வெப்பமடைந்து, ஃபோன் அல்லது சார்ஜருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் போன் சார்ஜர் ஆனதும், சார்ஜர் பின்னை, தானாக வெளியே தள்ளும் மொபைல் சார்ஜர்கள் இத்தகைய பிரச்சனைகளை எளிதில் தீர்க்கும்.
இதையும் படிக்க : சார்ஜரில் உள்ள R குறியீட்டை என்ன தெரியுமா? போன் பாதுகாப்புக்கு இது முக்கியம்
இது எப்படி செயல்படும்?
இதற்காக அந்த சார்ஜரில் ஒரு சென்சார் கொடுக்கப்பட்டிருக்கும். இது உங்கள் போன் முழுமையாக சார்ஜ் ஆனதும் அந்த சென்சார் உடனடியாக கண்டறியும். இதனையடுத்து எலக்ட்ரோ மேக்னேட்டிக் செயல்படத் தொடங்கும். பின்னர் அதில் உள்ள ஸ்பிரிங் உங்கள் சார்ஜர் பின்னை வெளியே தள்ளும். இதனால் உங்கள் போன் சார்ஜ் செய்யப்படுவது நிறுத்தப்படும். இது அதிக நேரம் சார்ஜ் செய்வதால் போன் பாதிக்கப்படும் அபாயத்தில் குறைக்கிறது. சில நேரங்களில் அதிக நேரம் சார்ஜ் செய்வதால் போன் வெடிப்பது போன்ற அபாயங்களையும் குறைக்கிறது. இதனையடுத்து இனி இரவில் பயமில்லாமல் போனை சார்ஜ் போட்டு தூங்கலாம். போனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சாம்சங், ஆப்பிள், சியோமி மற்றும் ஒன்பிளஸ் போன்ற பெரும்பாலான நவீன மற்றும் முன்னணி ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே பேட்டரி மேலாண்மையில் விரிவான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. சார்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்துதல், மின்சார ஓட்டத்தைக் குறைத்தல் மற்றும் அதிக வெப்பமடைவதைத் தடுத்தல் போன்ற பல அம்சங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. இருப்பினும், பல சாதாரண ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இத்தகைய தகவல்கள் தெரிவதில்லை. தானாக வெளியே தள்ளும் மொபைல் சார்ஜர்கள் அவர்கள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கும்.
இதையும் படிக்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாக உள்ள ஐபோன் ஃபோல்டு.. முக்கிய அம்சங்கள்!
விலை எவ்வளவு?
தற்போதைய விலை நிலவரத்தின்படி, இத்தகைய சார்ஜர்கள் வெளிநாடுகளில் ரூ.750 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்திய சந்தையில் அவற்றின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். புதிய பிராண்டட் நிறுவனங்கள் உருவாவதால் அவற்றின் விலையும் மாறக்கூடும்.



