அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாக உள்ள ஐபோன் ஃபோல்டு.. முக்கிய அம்சங்கள்!
iPhone Fold To Be Launch In India Soon | ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விரைவில் ஐபோன் ஃபோல்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
உலக ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ஒரு நிறுவனம் தான் ஆப்பிள் (Apple). உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள ஆப்பிள் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் செயலிகளை அறிமுகம் செய்து வருகிறது. இவ்வாறு ஆப்பிள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு செயலிக்கும் மக்களின் ஆதரவும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் ஃபோல்டு ஸ்மார்ட்போனை (iPhone Fold Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆப்பிளின் இந்த அட்டகாசமான படைப்பு குறித்த சில முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் ஃபோல்டு – டிசைன் மற்றும் டிஸ்பிளே அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் மடக்கி இருக்கும்போது மிகவும் சிறியதாகவும், அதனை திறக்கும்போது சற்றி பெரியதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் வெளிபக்க டிஸ்பிளே மற்றும் 7.8 இன்ச் உட்பக்க டிஸ்பிளே கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு டிஸ்பிளேக்களும் சாம்சங் எம்16 OLED பேனல்களை கொண்டு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் வாரண்டி கிடையாது.. ஆப்பிளின் இந்த ரூல் உங்களுக்கு தெரியுமா?
கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா செட் அப் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதாவது, 48 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா அகிய அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. உட்பக்க ஸ்கிரீனுக்காக 24 மெகாபிக்சல் டிஸ்பிளே கேமரா கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஏப்ரல் 15-ல் அசத்தலான் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஓப்போ!
பேட்டரி, ஸ்டோரேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் வரை அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5,400 mAh பேட்டரி மற்றும் 5,800 mAh பேட்டரி அம்சங்கள் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஐபோன்களில் இதுவரை இந்த பேட்டரி அம்சம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வெறும் இ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் சிம் கார்டு பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.