புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் வாரண்டி கிடையாது.. ஆப்பிளின் இந்த ரூல் உங்களுக்கு தெரியுமா?
Important Thing To Notice In Apple Warranty | ஆப்பிள் சாதங்களை வாங்கும்போதே அதற்கான வாரண்டியும் வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாரண்டியில் விதிகளின் படி சாதனங்கள் பழுதடைந்தால் அது சரி செய்து தரப்படும். ஆனால், ஆப்பிளின் இந்த விதி உங்களுக்கு தெரியுமா?
ஆப்பிள் ஐபோன்களை (Apple iPhones) வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அவ்வாறு ஆசை ஆசையாக வாங்கிய ஸ்மார்ட்போன்களை (Smartphone) மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் நினைப்பர். ஒருவேளை ஐபோன் பழுதடைந்துவிட்டால் அதற்கான வாரண்டியை பயன்படுத்தி சரிசெய்துக்கொள்ளலாம் எனவும் நினைப்பர். ஆனால், பயனர்கள் செய்யும் ஒரு சிறிய தவறு அவர்கள் வாரண்டியை பெற முடியாமல் செய்துவிடும். அதாவது, புகை பிடிக்கும் பயனர்களுக்கு ஐபோன் சாதனங்களுக்கான வாரண்டி உத்தரவாதம் வழங்க முடியாது என ஆப்பிள் திட்டவட்டமாக கூறுகிறது. இப்படி ஒரு விதி இருப்பது பலருக்கும் தெரியாது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் தனது வாரண்டி குறிப்பில் இதனை குறிப்பிட்டுள்ளது.
புகை பிடிக்கும் பயனர்களுக்கு ஆப்பிள் வாரண்டி வழங்காது?
இங்கு புகை பிடிக்கும் பயனர்களுக்கு ஆப்பிள் வாரண்டி வழங்காது என குறிப்பிடப்படுவது பயனர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது என்பதல்ல. புகை பிடிப்பதால் சாதனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு வாரண்டி வழங்க முடியாது என்பதை ஆப்பிள் வலியுறுத்துகிறது. கடந்த காலங்களில் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும் பயனர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களுக்கான வாரண்டி கேட்டபோது ஆப்பிள் இந்த விதியை உறுதிப்படுத்தி வாரண்டி வழங்க மறுத்த நிலையில் தான் இது மிகவும் பேசுபொருளாக மாறியது.
இதையும் படிங்க : நமக்கு கிடைக்கும் 5ஜி பிளான் உண்மையில் அன்லிமிட்டடா? உண்மை என்ன?
2007-ல் வாடிக்கையாளருக்கு வாரண்டி மறுத்த ஆப்பிள்
2007 ஆம் ஆண்டு, ஆப்பிள் மேக் புக் வாங்கிய பயனர் ஒருவர் தனது சாதனம் அதிக வெப்பமாவதாக ஆப்பிள் ஸ்டோருக்கு கொண்டு சென்றுள்ளார். அதனை வாங்கி சோதனை செய்த ஊழியர்கள், அந்த மேக் புக்கில் புகை படிந்திருந்ததை கண்டு வாரண்டி வழங்க மறுத்துள்ளனர். இந்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் அது தொடர்பாக வழக்கு தொடர்ந்தபோது, ஆப்பிள் நிறுவனம் தனது வாரண்டி விதிகளை சுட்டிக்காட்டி வாதாடியது.
இதையும் படிங்க : இனி இன்ஸ்டாகிராமில் கமெண்டுகளை சுலபமாக எடிட் செய்யலாம்.. அசத்தல் அம்சம் அறிமுகம்!
எனவே நீங்கள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தும் நபராக இருந்து உங்களுக்கு புகை பழக்கம் இருந்தால் உங்கள் சாதனங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களால் உங்கள் ஆப்பிள் சாதனத்திற்கான வாரண்டியை பெற முடியாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.