AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நமக்கு கிடைக்கும் 5ஜி பிளான் உண்மையில் அன்லிமிட்டடா? உண்மை என்ன?

Unlimited 5G Facts : இந்தியாவில் ஏர்சல், ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அன்லிமிட்டட் டேட்டா சேவையை வழங்குகின்றன. ஆனால் அது உண்மையில் அன்லிமிட்டடா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நமக்கு கிடைக்கும் 5ஜி பிளான் உண்மையில் அன்லிமிட்டடா? உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Apr 2026 16:44 PM IST

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமான பிறகு, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா என்ற பெயரில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டல் போன்ற நிறுவனங்கள் அதிக இண்டர்நெட் டேட்டாவை வழங்கி வருகின்றன. ஆனால்,  தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் வாக்குறுதிக்கு ஏற்ப  அன்லிமிடெட் டேட்டா நமக்கு வழங்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.  விளம்பரங்களில் சொல்லப்படாத சில முக்கிய நிபந்தனைகள் இந்த திட்டங்களில் இருக்கின்றன.

ஃபேர் யூசேஜ் பாலிசி என்றால் என்ன?

பெரும்பாலான 5ஜி  டேட்டா திட்டங்களில் ஃபேர் யூசேஜ் பாலிசி நடைமுறையில் இருக்கும். இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டாவை பயன்படுத்திய பிறகு, இண்ட்ர்நெட் ஸ்பீட் குறைக்கப்படலாம்.  இது நெட்வொர்குகளுக்கு ஏற்ப மாறுபடும். சில நிறுவனங்களில் இண்டர்நெட் ஸ்பீட் குறைக்கப்படலாம், வீடியோ ஸ்டீரீமிங் தடைபடலாம் அல்லது டவுன்லோடு வேகம் குறையலாம். ஆனால் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் இந்த வரம்பை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ஆனால் அதிகமாக டேட்டா பயன்படுத்தும் பயனர்கள் இதை உணர முடியும்.

இதையும் படிக்க : இனி இரைச்சல் இல்லாமல் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்.. வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!

5ஜி டேட்டா தடையின்றி கிடைக்க தேவையானவை

அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்க, நம்மிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். நம்மிடம்  உள்ள ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி இருக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் பகுதியில் 5ஜி நெட்வொர்க் கிடைக்க வேண்டும். மேலும், நெட்வொர் நிறுவனங்கள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு ஏற்ப ரூ. 239 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் திட்டத்தை நாம் பெற்றிருக்க வேண்டும். மேற்சொன்ன இந்த விஷயங்கள் இல்லையெனில் உங்கள் நெட்வொர்க் 4ஜி சேவைக்கு மாறிவிடும். அப்போது தினசரி டேட்டா வரம்பு மட்டுமே கிடைக்கும்.

மேலும் நம்மிடம் 5ஜி இணைப்பு இரு்தாலும், எப்போதும் அதற்கேற்ற இண்டர்நெட் ஸ்பீட் கிடைக்காது. அருகில் 5ஜி டவர் இல்லாமல் இருக்கும்போது, சிக்னல் சரியாக கிடைக்காதபோது, நம் போன் சார்ஜ் குறைவாக இருக்கும்போது சில நேரங்களில் 5ஜி அளவுக்கான ஸ்பீட் நமக்கு கிடைக்காமல் இருக்கலாம்.

இதையும் படிக்க : ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்யக்கூடாத தவறுகள்!

இந்தியாவில் பல அன்லிமிட்டட் 5ஜி திட்டங்கள் பெரும்பாலும் தினசரி 4ஜி டேட்டாவாக  தான் இருக்கும். குறிப்பாக ஒரு நாள் திட்டங்களான 1.5ஜிபி, 2 ஜிபி போன்ற திட்டங்கள் முழுமையாக நமக்கு 5ஜி சேவையை வழங்காது. மேலும் நீங்கள் 5ஜி கவரேஜ் ஏரியாவில் இருந்தால் மட்டுமே கூடுதல் அன்லிமிட்டட் டேட்டா கிடைக்கும். ஆனால் சிக்னல் சரியாக கிடைக்தாத போது 4ஜி சேவை மட்டுமே நமக்கு கிடக்கும்.

Follow Us