AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமூக ஊடகங்களில் இனி ஃபேக் ஐடிகளுக்கு No.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய ஆலோசனை மேற்கொள்ளும் அரசு!

Indian Government Action Against Fake IDs | சமூக ஊடகங்களில் ஃபேக் ஐடிகள் தொடர்பான சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், அவற்றை முற்றிலுமாக தடுக்க அரசு முக்கிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் இனி ஃபேக் ஐடிகளுக்கு No.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய ஆலோசனை மேற்கொள்ளும் அரசு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Mar 2026 16:25 PM IST

இந்திய பொதுமக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் (Social Media Platforms) பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook), எக்ஸ் (X), ஸ்னாப்சாட் (Snapchat) உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், இந்த செயலிகளில் பொதுமக்கள் சந்திக்கும் முக்கிய சிக்கல் உள்ளது. அது தான் ஃபேக் ஐடிகள் (Fake ID) மூலம் நடைபெறும் மோசடிகள் மற்றும் குற்ற சம்பங்கள். இந்த நிலையில் தான், சமூக வலைத்தளங்களில் ஃபேக் ஐடிகளை ஓபன் செய்ய முடியாமல் செய்ய முக்கிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்த பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் இனி ஃபேக் ஐடிகளுக்கு No

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளில் ஃபேக் ஐடிகள் மூலம் ஏராளமான மோசடி மற்றும் குற்ற சம்பங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தான், ஃபேக் ஐடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு முக்கிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இனி வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூல ஊடக கணக்குகளை திறக்க கேஒய்சியை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கிரியேட்டர்களுக்கு பெரிய வாய்ப்பு – ஏஐ பயிற்சிக்காக 15,000 இலவச ஸ்காலர்ஷிப் – மத்திய அரசு அறிவிப்பு

சமூக ஊடகங்களுக்கு கேஒய்சி அமலுக்கு வந்தால் என்ன நடக்கும்?

இந்த கேஒய்சி (KYC – Know Your Customer) முறை சமூக ஊடக கணக்குகளை திறப்பதற்கும் அமலுக்கு வந்தால் வங்கி கணக்கு தொடங்குவது, சிம் கார்டு வாங்குவதை போல சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கும்போதும் அடையாள சான்றுகளை பதிவிட்டு கணக்குகளை திறக்க வேண்டும் சூழல் உருவாகும். இந்த அம்சத்தின் மூலம் பெயர் தெரியாமல் மறைமுகமாக ஃபேக் ஐடிகளை வைத்து மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது குறையும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் காட்டினாலே போதும்… மருத்துவ செலவுகளுக்கு பணம் எடுத்து செல்பவர்களுக்கு தளர்வு – தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பு

இந்த அம்சம் குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், இது விரைவில் அமலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us