AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் அறிமுகமாகும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Oppo Find X9 Ultra Smartphone | ஓப்போ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Mar 2026 19:06 PM IST

இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக ஓப்போ (Oppo) உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விரைவில் தனது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போனை (Oppo Find X9 Ultra Smartphone) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

ஓப்போ தனது அடுத்த புதிய மாடல் ஸ்மார்ட்போனை 2026, ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் எந்த தேதியில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது என்பதை அறிவிக்காத நிலையில், ஏப்ரல் 20, 2026 அன்று அந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒப்போ நிறுவனத்தின் முதல் அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ – ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

பயனர்கள் சிறந்த போட்டோகிராஃபி அனுபவத்தை பெற, ஓப்போ நிறுவனம் ஸ்வீடிஷ் நிறுவனமான ஹாசல்பிளாட் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. இந்த நிலையில், இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 10எக்ஸ் ஆப்டிக்கல் டெலிபோட்டோ சூம் லென்ஸ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி தூரத்தில் உள்ள பொருட்ளைஅ துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் மெயின் கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் ஆகிய அம்சங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : குழந்தைகளும் பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் – மெட்டாவின் புதிய வசதி

இந்த ஸ்மார்ட்போன் 7,000 mAh பேட்டரி, 100 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் அம்சம் மற்றும் 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் என்று அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us