AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கெஸ்ட் சாட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

WhatsApp Introduced New Guest Feature | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அந்த நிறுவனம் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

கெஸ்ட் சாட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Mar 2026 20:49 PM IST

உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மிக முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இந்த செயலி பல்வேறு துறைகள் மற்றும் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், மெட்டா அதில் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கெஸ்ட் சாட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றால் அவர் வாட்ஸ்அப் செயலியில் மொபைல் எண்ணை பதிவிட்டு லாக் இன் செய்திருக்க வேண்டும். வெப் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்றாலும் கூட மொபைல் போனில் இருக்கும் செயலியில் இருந்து கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகே லாக் இன் செய்ய முடியும். ஆனால், தற்போது வாட்ஸ்அப் செயலியே இல்லாமல் வாட்ஸ்அப்பில் உரையாடும் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் கெஸ்ட் சாட்ஸ் (Guest Chats) அம்சம்.

இதையும் படிங்க : AI ஆதிக்கம்.. மெட்டா நிறுவனம் 20% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டம்.. அதிர்ச்சி தகவல்!

கெஸ்ட் சாட்ஸ் அம்சம் எப்படி செயல்படும்?

இந்த கெஸ்ட் சாட்ஸ் அம்சத்தின் மூலம் ஒருவர் செயலி இல்லாமலே வெப் மூலம் வாட்ஸ்அப்பில் உரையாட முடியும். வாட்ஸ்அப் பயன்படுத்தாத நபர்கள், வாட்ஸ்அப்பில் உள்ள நபர்களிடம் வெப் மூலம் ஒரு லிங்கை பயன்படுத்தி உரையாட முடியும் என்றும், இதற்கு வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற எந்தவிதமான அவசியமும் இல்லை என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட IQOOZ11x!

இந்த அம்சத்தில் ஏற்கனவே வாட்ஸ்அப்பில் இருக்கும் பயனர்கள் Invite a  Friend அம்சத்தின் மூலம் வரவேற்கலாம். இந்த வரவேற்பை பெறும் நபர் லிங்கை கிளிக் செய்யும்போது அவருக்கு இரண்டு சாய்ஸ்கள் கொடுக்கப்படும். ஒன்று செயலியை பதிவிறக்கம் செய்வது. மற்றொன்று கெஸ்டாக பயன்படுத்துவது. கெஸ்டாக பயன்படுத்தும் விருப்பத்தை தேர்வு செய்தால் அந்த நபர் தனது பெயரை உள்ளிட வேண்டும். இதன் கட்டாயமான ஒன்றாக உள்ளது. அதே சமயம், எதிரில் இருக்கும் நபர் அவர் யார் என்பதையும் அறிந்துக்கொள்ள உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us