AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளும் பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் – மெட்டாவின் புதிய வசதி

WhatsApp for Kids : மெட்டா நிறுவனம் குழந்ததைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப்பை Parent Control வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாட்ஸ்அப்பை முழுமையாக கண்காணிக்க முடியும். இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க முடியும்.

குழந்தைகளும் பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் – மெட்டாவின் புதிய வசதி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Mar 2026 15:24 PM IST

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலும், கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டு மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் முக்கிய அப்டேட்டை மேற்கொண்டுள்ளன. அதன் படி இப்போது 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பெற்றோரின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே அவர்களால் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியம்.

குழந்தைகளுக்காக வாட்ஸ்அப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றம்

மெட்டா நிறுவனம் குழந்ததைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப்பை Parent Control வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெர்ஷனில் பெற்றோர் கட்டுப்பாடு மட்டுமல்லாமல் பல முக்கிய அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : சாட்ஜிபிடி, பிளிப்கார்டை பின்னுக்கு தள்ளிய செயலி.. பதிவிறக்கத்தில் நம்பர் இதுதான்.. என்ன தெரியுமா?

  • இந்த வசதியை பயன்படுத்த பெற்றோர் மற்றும் குழந்தையின் மொபைல் இரண்டும் அருகில் இருக்க வேண்டும்.
  • குழந்தையின் வாட்ஸ்அப்பில் வரும் கியூஆர் கோடை பெற்றோர் ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • இதன் மூலம் இரண்டு வாட்ஸ்அப்களும் இணைக்கப்பட்டு பெற்றோருக்கு குழந்தையின் வாட்ஸ்அப்பில் முழு கட்டுப்பாடும் செல்லும்.

இதனையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் யாரிடம் பேசலாம் என்பதை தீர்மானிக்க முடியும். மேலும் அவர்கள் எந்த வாட்ஸ்அப் குரூப்களில் இருக்கிறார்கள். அதில் வரும் மெசேஜ்கள் என்பன போன்ற தகவல்கள கண்காணிக்க முடியும். மேலும் பிரைவசி செட்டிங் அனைத்தையும் நிர்வகிக்கலாம். நம் குழந்தைகள் யாருடன் பேசுகிறார்கள் என்பதையும் நம்மால் கண்காணிக்க முடியும்.

குழந்தைகளுக்கான் வாட்ஸ்அப்பில் நீக்கப்பட்ட அம்சங்கள்

  • குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட வாட்ஸ்அப்பில் சேன்ல்ஸ் வசதி இல்லை.
  • ஸ்டேட்டஸ் வைக்க முடியாது.
  • Disappearing Messages என்ற வசதி இருக்காது.
  • View Once Photos வசதி இல்லை

இதையும் படிக்க : ஸ்மார்ட் வாட்ச் வாங்க போறீங்களா?.. அதற்கு முன்னாடி இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!

இதன் மூலம் குழந்தைகள் வாட்ஸ்அப்பை தவறாக பயன்படுத்தவோ அல்லது வேறு யாரும் குழந்தைகளுக்கு தவறான விஷயங்களை அனுப்புவதையோ பெற்றோர்களால் தடுக்க முடியும். இதனால் குழந்தைகளுக்கு வாட்ஸ்அப் பாதுகாப்பானதாக மாறும். சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கவலை அதிகரித்துள்ள நிலையில் வாட்ஸ்அப் இந்த புதிய மாற்றத்த கொண்டு வந்துள்ளது. மேலும் குழந்தைகளின் ஆன்லைன் பயன்பாட்டை குறைக்கவும் பாதுகாப்பான தொடர்பை உருவாக்கவும் இந்த பதிய வசதி உதவும் என கூறப்படுகிறது.

Follow Us