ஸ்மார்ட் வாட்ச் வாங்க போறீங்களா?.. அதற்கு முன்னாடி இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
Buy Smart Watch With These Tips | தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஒருவர் தனக்கு ஏற்ற சிறப்பான ஸ்மார்ட் வாட்சை வாங்குவது எப்படி, அதற்கு முன்பு சோதனை செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch) உள்ளது. ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தாதவர்களை பார்ப்பதற்கே அரிதாக உள்ளது. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வின் முக்கிய அங்கமாக ஸ்மார்ட் வாட்ச் மாறியுள்ளது. ஸ்மார்ட் வாட்ச்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் எது தங்களுக்கு சரியானது என தெரியாமல் பலரும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், உங்களுக்கு சரியான ஸ்மார்ட் வாட்சை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சரியான ஸ்மார்ட் வாட்சை தேர்வு செய்வது எப்படி?
நீங்கள் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உள்ளன.
தேவை
நீங்கள் ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதற்கு முன்னதாக அந்த வாட்ச் உங்களுக்கு என்ன தேவைக்காக பயன்படுகிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் உடற் கட்டமைப்பில் அதிகம் கவனம் செலுத்தும் நபராக இருந்து, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும் நபராக இருந்தால் ஸ்மார்ட் வாட்ச் வாங்குவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.




இதையும் படிங்க : Street View முதல் 3D காட்சிகள்.. அட்டகாசமான அம்சங்களை வழங்கும் கூகுள் மேப்ஸின் Ask Maps!
ஸ்மார்ட்போன் உடன் இணைக்க முடியுமா?
ஸ்மார்ட் வாட்சை தேர்தெடுக்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றும் உள்ளது. அதுதான், ஸ்மார்ட்போன் உடன் இணைக்கும் அம்சம். சந்தையில் இருக்கும் அனைத்து ஸ்மார்ட் வாட்ச்களிலும் ஸ்மார்ட்போன் இடன் இணைக்கும் அம்சம் இருக்காது. எனவே ஸ்மார்ட் வாட்சை தேர்வு செய்யும்போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.. எப்படி செயல்படுகிறது?
டிசைன் மற்றும் டிஸ்பிளே
ஸ்மார்ட் வாட்ச்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கும். எனவே உங்களது விருப்பங்களுக்கு ஏற்ப வடிவம், செயல்திறன் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். சில ஸ்மார்ட் வாட்ச்களில் அதன் பட்டையை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. எனவே அத்தகைய வாட்ச்களை தேர்வு செய்யும்போது உடைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.