AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.. எப்படி செயல்படுகிறது?

How Indian Voting Machines Function | சமீப காலமாக இந்திய தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.. எப்படி செயல்படுகிறது?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Mar 2026 12:17 PM IST

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக விவிபேட் (VV Pat) எனும் மின்னணு வாக்குப்பதிவு முறை தான் அமலில் உள்ளது. இது வாக்குச்சீட்டு வாக்குப்பதிவு முறையை விடவும் மிகவும் எளிதானதாகவும், விரைவானதாகவும் உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை இதன் மூலம் மிகவும் விரைவானதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது

இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1980களில் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்  மற்றும் பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இயந்திரமாகும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். பாதுகாப்பு கருதி அதன் தொழில்நுட்ப அம்சங்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : K. Selvaperunthagai Tamil Nadu Election: 4 கட்சிகள் மாற்றம்.. காங்கிரஸில் தலைமை பதவி.. செல்வப்பெருந்தகையின் 3-ஆவது முறை எம்எல்ஏ கனவு பலிக்குமா?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி செயல்படுகிறது?

இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எந்த விதமான வெளிப்புற சானதனங்களோ, இணைப்புகளோ தேவை இல்லை. இந்த இயந்திரத்தில் பேலோட்டிங் யூனிட் மற்றும் கண்ட்ரோல் யூனிட் என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். இந்த இரண்டு யூனிட்களில் பேலோட்டிங் யூனிட்டில் தான் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்துவார்கள். மற்றொரு யூனிட்டான கண்ட்ரோல் யூனிட் செலுத்திய வாக்குகளை சேகரிக்க பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க : இண்டி கூட்டணிக்கு யார் தலைமை.. திமுக-காங்கிரஸ் இடையே நீடிக்கும் உரசல்.. தொகுதி பங்கீட்டில் தாமதம்!

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குகளை விரைவாக பதிவு செய்யவும், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை விரைவாக எண்ணி முடிக்கவும் இது மிகவும் உதவியான அம்சமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. அதனை சரிசெய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய தேர்தல் ஆணையம் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us