AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

K. Selvaperunthagai Tamil Nadu Election: 4 கட்சிகள் மாற்றம்.. காங்கிரஸில் தலைமை பதவி.. செல்வப்பெருந்தகையின் 3-ஆவது முறை எம்எல்ஏ கனவு பலிக்குமா?

Tamil Nadu Elections 2026: புரட்சி பாரதம் முதல் காங்கிரஸ் கட்சி வரை பல்வேறு கட்சிகள் மாறி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் கு.செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவாரா. அவ்வாறு போட்டியிட்டால் மீண்டும் தனது வெற்றியை தக்க வைத்துக்கொள்வாரா.

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 Mar 2026 13:29 PM IST
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர்  செல்வப்பெருந்தகை. இவர்,  கடந்த 1964- ஆம் ஆண்டு ஏப்ரல் 14- ஆம் தேதி குப்புசாமி-  ராசம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். விவசாய குடும்பத்தை பின்னனியாக கொண்ட செல்வப்பெருந்தகை  சட்டப் படிப்பை முடித்து, சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்திருந்தார். அப்போது, ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்ததுடன் 16 ஆண்டுகள் பணியாற்றினார்.  பின்னர் பொது வாழ்வில் ஈடுபட விரும்பிய அவர் அந்தப் பணியை துறந்ததுடன் பூவை மூர்த்தியால் தொடங்கப்பட்ட அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி  அமைப்பில்  இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

1 / 5
தற்போது இந்த அமைப்பு புரட்சி பாரதம் கட்சியாக உருமாறியுள்ளது.  அந்த கட்சியில்  பணியாற்றி வந்த  செல்வப் பெருந்தகை  திடீரென விலகியதுடன்  கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.  பின்னர்,  திருமாவளவனுடன்  ஏற்பட்ட நட்பு காரணமாக  அந்த கட்சியில் இணைந்தார். தொடர்ந்து,  அந்த கட்சியின் பொதுச் செயலாளராக செல்வப் பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். அத்துடன், விசிக சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்து வந்தார். பின்னர்,  2006  சட்டமன்றத் தேர்தலில்  போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

2 / 5
அதன்படி, கடந்த 2006 தேர்தலில் மங்களூர்  தொகுதியில் போட்டியிட்டு தனது முதல் எம்எல்ஏ  பதவியை அடைந்தார். பின்னர்,  அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விசிகவில்  இருந்து விலகிய செல்வப்பெருந்தகை  கடந்த 2008- ஆம் ஆண்டு  பகுஜன் சமாஜ்  கட்சியில் இணைந்து மாநில தலைவராக உருவெடுத்தார்.  சுமார் 2 ஆண்டுகள்  அந்தக் கட்சியில்  இருந்து வந்த செல்வப்பெருந்தகை, கடந்த 2010- ஆம் ஆண்டு திடீரென ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

3 / 5
அவருக்கு  காங்கிரஸ் கட்சியில் பட்டியலின பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.  இதோடு சேர்த்து  தமிழக சட்டப்பேரவையின் பொது கணக்கு குழு தலைவர் மற்றும் காங்கிரஸ்  கட்சியின் மாநில தலைவர்  பொறுப்பும் வழங்கப்பட்டு  செயலாற்றி வருகிறார். 2011- ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியிலும், 2016- ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தான் தோல்வியுற்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதியியேலே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

4 / 5
கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் விசிக  சார்பில் களமிறங்கிய செல்வப் பெருந்தகை  தன்னை எதிர்த்து போட்டியிட்டவேட்பாளரை-ஐ வீழ்த்தி  62,171 வாக்குகள் பெற்று  வெற்றியை பதிவு செய்தார்.  பின்னர்,  கடந்த  2021 சட்டமன்றத் தேர்தலில்  ஸ்ரீபெரும்புதூர்  தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை பழனியை-ஐ  வீழ்த்தி ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 353 வாக்குகள் பெற்று  2-ஆவது முறையாக  சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.  வருகிற தேர்தலிலும் இதே தொகுதியில்  செல்வப் பெருந்தகை களமிறங்குவார் என்று  கூறப்படுகிறது.  இதில்,  அவருக்கு வெற்றி வசமாகுமா  என்பதை களம் தான் முடிவு செய்யும்.

5 / 5
Follow Us