AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
முதல்வர் விஜய் பிறந்தநாள்.. கோவிலில் அமைச்சர் ஸ்ரீநாத் வேண்டுதல்!!

முதல்வர் விஜய் பிறந்தநாள்.. கோவிலில் அமைச்சர் ஸ்ரீநாத் வேண்டுதல்!!

Baskar P
Baskar P | Published: 22 Jun 2026 13:55 PM IST

முதலமைச்சர் நீண்ட ஆயுளுக்காகச் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் வழிபாடுகளைச் செய்தார். அதனைத் தொடர்ந்து, அண்ணா நகரில் அமைந்துள்ள புனித லூக்கா ஆலயத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். முதலமைச்சர் மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர இறைவனின் ஆசி வேண்டி, கிறிஸ்துவப் பெருமக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், சென்னை நகரின் முக்கிய ஆன்மீகத் தலங்களுக்கு நேரில் சென்று, முதலமைச்சர் அவர்களின் நலம் வேண்டியும், மக்கள் நலம் சிறக்க வேண்டி கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள புகழ்பெற்ற சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்ற அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், அங்கு சாமி தரிசனம் செய்து, முதலமைச்சர் நீண்ட ஆயுளுக்காகச் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் வழிபாடுகளைச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அண்ணா நகரில் அமைந்துள்ள புனித லூக்கா ஆலயத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். முதலமைச்சர் மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர இறைவனின் ஆசி வேண்டி, கிறிஸ்துவப் பெருமக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார்.

மேலும், சென்னை எழும்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மோத்தி பாபா தர்ஹாவிற்குச் சென்ற அமைச்சர், அங்குச் சிறப்புத் தொழுகை நடத்தி வழிபாடு மேற்கொண்டார். முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு தர்ஹாவில் துவா ஓதி, மதநல்லிணக்கத்தோடு பிரார்த்தனை செய்யப்பட்டது.

Follow Us