ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மூன்று மாதங்களாக நீடித்து வந்த கடும் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு 210 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு 10 உயர்ந்துள்ளது.