வெறும் சில நிமிடங்கள் டிராஃபிக்கில் சிக்கினாலே நமக்கு எரிச்சல் ஏற்படும். ஆனால், 12 நாட்கள் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! உலக வரலாற்றில் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல் 2010 ஆம் ஆண்டு சீனாவில் நடந்தது. பெய்ஜிங், திபெத் எக்ஸ்பிரஸ்வேயில் ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசல் 100 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் நீடித்தது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையிலேயே முடங்கின. 2010 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த நெரிசல் தொடங்கியது.