கடலின் ஆழத்தில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிசய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியில், உலகின் மிகப் பழமையான, மிக ஆழமான மற்றும் மிகப் பெரிய திமிங்கல கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட சில திமிங்கல எச்சங்கள் 50 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.