AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருவண்ணாமலை கோவிலில் மகனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!

திருவண்ணாமலை கோவிலில் மகனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!

Vinoth V
Vinoth V | Updated On: 21 Jun 2026 10:01 AM IST

Aishwarya Rajinikanth: இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலில் சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது மகனுடன் சாமி தரிசனம் செய்தார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலில் சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 

Published on: Jun 21, 2026 09:59 AM
Follow Us