உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மணமகன் குதிரை அல்லது ஆடம்பர காரில் திருமண ஊர்வலத்தில் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை, உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒஸ்மான் என்ற மணமகன், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் புல்டோசரில் திருமண ஊர்வலமாக வந்தார்.