சிறுமிகளுக்கு முதலுதவி வழங்கியதை இழிவுபடுத்துவதா? அமைச்சர் விஸ்வநாதன் பதிலடி..
இந்த சூழலில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சிறுமிகள் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்த நிலையில், அவர்களுக்கு முதலுதவி செய்தேன். மனிதாபிமான அடிப்படையில் சிறுமிகளைத் தொட்டு தூக்கி, தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்க முயன்றதை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஜூன் 24, 2026: உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த சூழலில், அது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறுமிகளுக்கு முதலுதவி செய்வதை இழிவுபடுத்துவதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றவுடன், வரலாற்றில் முதல்முறையாக கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் விஸ்வநாதன்:
அமைச்சர் விஸ்வநாதன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழாவில் நடனமாடியது பெரும் பேசுபொருளாக மாறியது. அதற்கு விளக்கம் அளித்த அவர், “நடனமாடியதில் எந்தத் தவறும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: இனி நல்லது நடக்கும்.. அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் விட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்..
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஒருவரின் கால்களைத் தொடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
முதலுதவி வழங்கியதை இழிவுபடுத்துவதா?
இந்த சூழலில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சிறுமிகள் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்த நிலையில், அவர்களுக்கு முதலுதவி செய்தேன். மனிதாபிமான அடிப்படையில் சிறுமிகளைத் தொட்டு தூக்கி, தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்க முயன்றதை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மனிதாபிமானச் செயலை இழிவுபடுத்தி திமுகவைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பதிவு செய்திருப்பது அநாகரிகமான செயல். அமைச்சராக இருந்தபோது அன்பில் மகேஷ் செய்த ஊழல்கள் குறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் அளித்த பேட்டியிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, குறிப்பாக தலித் சமூகத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கும் என்னை நோக்கி தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அநாகரிகமான விமர்சனங்கள் மூலம் அன்பில் மகேஷ் தனது தரத்தையே குறைத்துக் கொண்டுள்ளார். இத்தகைய விமர்சனங்கள் மூலம் எங்களை ஒருபோதும் வெல்ல முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.