தனியார் கல்லூரி கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும்.. கோவையில் போராட்டம்
கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தனியார் கல்லூரிகளின் கட்டண முறைகேடுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உயர்கல்வி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடவும், அனைத்து கல்லூரி சேர்க்கைகளையும் ஒற்றைச் சாளர முறையில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம் என இயக்கத் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
Follow Us
Latest Videos
