Inland Taipan எனப்படும் “ஃபியர்ஸ் ஸ்நேக்”, உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியான பகுதிகளில் வாழும் இந்த பாம்பு மிகவும் அரிதாகவே மனிதர்களின் கண்களில் படுகிறது. இதுவரை இந்த பாம்பு கடித்து மனிதர் உயிரிழந்ததாக உறுதியான தகவல் எதுவும் இல்லை என்பதும் ஆச்சரியமாகும். Inland Taipan பெரும்பாலும் குயின்ஸ்லாந்து மற்றும் தென் ஆஸ்திரேலியாவின் வறண்ட பகுதிகளில் வாழ்கிறது.