AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின்சாரத் துறைக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. நாளை வெள்ளை அறிக்கை வெளியீடு.. சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஸ்கெட்ச்!

Electricity Department Financial Status White Paper: தமிழக மின்சாரத் துறையின் நிதி நிலை உள்ளிட்டவை குறித்த வெள்ளை அறிக்கை நாளை வியாழக்கிழமை காலை வெளியிடப்பட உள்ளதாக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அமைச்சர் சிடிஆர். நிர்மல் குமார் வெளியிட உள்ளார்.

மின்சாரத் துறைக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. நாளை வெள்ளை அறிக்கை வெளியீடு.. சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஸ்கெட்ச்!
மின்துறை வெள்ளை அறிக்கை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Jun 2026 17:45 PM IST

தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. அதன்படி, தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவி ஏற்றபோது, தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதில், பல்வேறு முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, மின்சாரத்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அந்த துறையின் அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். அதன்படி, நாளை வியாழக்கிழமை ( ஜூன் 24- ஆம் தேதி) வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மின்சாரத்துறையின் வெள்ளை அறிக்கை

இது தொடர்பாக, மின்வாரிய துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள் கட்டமைப்பு, நிதி, மனித வளம், தளவாடப் பொருள்கள், நடைபெற்று வரும் திட்ட பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

மேலும் படிக்க: அதிமுக – திமுக கவுன்சிலர்கள் மோதல்.. பறந்த பேப்பர்கள்.. களேபரமான சென்னை மாநகராட்சி கூட்டம்.. நடந்தது என்ன?

மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் வெளியீடு

இதனை, மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் வெளியிட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சுமார் 10 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டதாகவும், அதிக அளவிலான வட்டியை தமிழக அரசு செலுத்தி வருவதாகவும் தமிழக வெற்றிக் கழக அரசு குற்றம் சாட்டி இருந்தது. இது தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அதில் தமிழக அரசுக்கான வருவாய், செலவு, வட்டி செலுத்தப்படும் விகிதம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காலை 10.30 மணிக்கு வெள்ளை அறிக்கை வெளியீடு

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அரசின் வரவு, செலவுகள் குறித்த நிதிநிலை மற்றும் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது, மின்சார துறை சார்ந்த நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..

Follow Us