AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐஎம் கட்சிக்கு எப்போதும் இல்லை” என்றும், “திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Jun 2026 14:55 PM IST

ஜூன் 24, 2026: இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஎம்-க்கு எப்போதும் இல்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தது தொடர்பாக திமுக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தவெகவிற்கு ஆதரவு ஏன் – பெ. சண்முகம் கொடுத்த விளக்கம்:

நேற்று சட்டப்பேரவையில் பதிலுரையாற்றிய முதலமைச்சர் விஜய், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்களாகவே முடிவெடுத்து ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, “குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்ப்பதற்காகவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தோம்; இது எங்கள் கட்சியின் முடிவு” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் படிக்க: மாணவர்களுக்கு வெரி குட் நியூஸ்.. இலவச சைக்கிள்களில் புத்தம் புதிய டிசைன்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

இதற்கிடையில், “புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் பெ. சண்முகம் எழுதிய கட்டுரையில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்ததன் மூலம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையாமல் தடுத்தோம். மேலும், திமுக ஆதரவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் சூழலையும் தவிர்த்தோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சண்முகத்திற்கு கேவலமாக இல்லையா – முரசொலி நாளிதழில் விமர்சனம்:

இதற்கு முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், “குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும், தேர்தல் வந்துவிடும் என்று கூறுவது வெறும் பம்மாத்து. திராவிடக் கட்சி அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் சண்முகத்தின் உண்மையான நோக்கம். அதனால்தான் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை அவசரமாக ஆதரித்துள்ளனர்.

144 உறுப்பினர்களின் ஆதரவுடன் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். அதில் அதிமுகவைச் சேர்ந்த 25 உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர். அதிமுக ஆதரவுடன் அமைந்துள்ள ஆட்சியை ஆதரிப்பது சண்முகத்துக்கு கேவலமாகத் தெரியவில்லையா? சி.வி. சண்முகமும், பெ. சண்முகமும் ஒரே நேர்கோட்டில் நிற்கிறார்கள். கொள்கை என்று எதுவும் இல்லை” எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய்:


இந்த சூழலில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐஎம் கட்சிக்கு எப்போதும் இல்லை” என்றும், “திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us