கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம் – முதியவர்களுக்கு நேர்ந்த கதி
கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து பணியாளர்கள் அடித்தது தான் அவர்களது மரணத்துக்கு காரணம் என கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 12 : கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து பணியாளர்கள் அடித்தது தான் அவர்களது மரணத்துக்கு காரணம் என கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம்
இதனையடுத்து அன்னூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய், குப்பை தொட்டி இருக்கும் இடங்கள் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் வீடுகளுக்கும் சென்றும் கொசு மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 11, 2026 நேற்று உப்பு தோட்டம் பகுதியில் கொசு மருந்து அடித்த போது அந்த பகுதியில் வசித்த மோகன் என்பவரும், ராணி என்பவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிக்க : தெருக்கள், சாலைகளுக்கு சாதி பெயர்கள்.. தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம்..




தங்களுக்கு ஏற்கனவே நுரையீலல் பாதிப்பு இருந்தததாகவும் தங்கள் வீட்டில் கொசு மருந்து அடிக்க வேண்டாம் என அவர்கள் கேட்டும் பேரூராட்சி ஊழியர்கள் அவர்களது வீட்டில் கொசு மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்து கலந்து அடித்தது தான் அவர்கள் மரணத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..
இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக அப்பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களது பேச்சுவார்த்தையில் மக்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 4 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே கொசு மருந்து அடிக்கப்பட்டது எனவும் இறந்தவர்களுக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் இருந்தாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக இறந்த மோகன் கடந்த 2 நாட்களுக்கு முன் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.