சென்னையில் ஸ்பாவில் 15 பவுன் தாலி சங்கிலியை பறிகொடுத்த நடிகை.. வீடியோ வெளியிட்டு புலம்பல்!
Actress Vinodhini Lost Gold Chain : சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு பிரபல ஸ்பாவில் திரைப்பட நடிகை வினோதினி தனது 15 பவுன் எடையுள்ள தங்க தாலி செயினை திருடு போனது. இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் திரைப்பட நடிகை வினோதினி ( 51 வயது). இவர் கடந்த ஜூலை மாதம் 7- ஆம் தேதி ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள ஸ்பாவுக்கு சென்றார். அங்கு, மசாஜ் செய்வதற்காக தனது 15 பவுன் எடையுள்ள தங்க தாலி செயினை கழற்றி கொடுக்குமாறு ஸ்பா ஊழியர்கள் தெரிவித்தனர். அதன்படி, நடிகை வினோதினி தனது தாலி செயினை கழற்றி கொடுத்துவிட்டு மசாஜ் செய்துள்ளார். அப்போது, அவரது கணவரின் உறவினர் ஒருவர் உயிரிழந்ததாக செல்போனில் அழைப்பு வந்தது. இதனால், அந்த துக்க நிகழ்வுக்கு அவசரமாக செல்வதாக கூறி நடிகை வினோதினி புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, ஸ்பா ஊழியரிடம் கழற்றி கொடுத்த தனது தங்க தாலி செயினை எடுத்துச் செல்ல மறந்து விட்டதாக தெரிகிறது.
ஸ்பாவில் கொடுத்த தங்க சங்கிலி மாயம்
இந்த நிலையில், 2 நாட்கள் கழித்து ஜூலை 9- ஆம் தேதி நடிகை வினோதினி மீண்டும் அந்த ஸ்பாவுக்கு சென்று தனது தாலி செயினை மறந்து விட்டு சென்று விட்டதாகவும், அதனை திரும்ப பெறுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ஸ்பா ஊழியர்கள் நீங்கள் கூறியபடி எந்த தாலி செயினும் இங்கு இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு, நடிகை வினோதினி கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடிகை வினோதினி புகார் அளித்தார்.




மேலும் படிக்க: சென்னையில் கொடூரம்.. அக்கா வீட்டில் தஞ்சமடைந்த மனைவியை கதவை பூட்டி கழுத்தை அறுத்த கணவன்!
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்
அந்த புகாரில், மேற்கண்ட ஸ்பாவில் தனது தாலி செயினை கழற்றி வைத்ததாகவும், துக்க வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் தாலி செயினை மறந்து விட்டு சென்றதாகவும், திரும்ப கேட்டபோது, தாலி செயின் எதுவும் இல்லை என்று ஸ்பா ஊழியர்கள் தெரிவித்ததாகவும், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் கடந்த இரு நாள்களாக உடனடியாக அந்த ஸ்பாவுக்கு நேரில் சென்று செயினை வாங்கவில்லை . மேலும், இதன் காரணமாகவே தாமதமாக புகார் அளிக்க வந்திருப்பதாகவும் அதில் தெரிவித்து இருந்தார்.
ஸ்பாவில் தாலியை தொளைத்த நடிகை வினோதினி 🥲🥺😒
திருப்பி வாங்க வாய்ப்பு இருக்கா? pic.twitter.com/vTPdDYB0SO
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) August 11, 2026
சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நடிகை வினோதினி
இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புகாரானது நேற்று திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 10) அளிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடிகை வினோதினி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தாலி செயின் மாயமான சம்பவம் குறித்து பேசி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: வாகன சோதனையில் நிற்காமல் சென்ற இளைஞர்.. லத்தியால் தாக்கியதில் கண் பார்வை பாதிப்பு.. தூத்துக்குடியில் 2 காவலர் மீது அதிரடி நடவடிக்கை!