AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!

R.B. Udhayakumar controversial remarks CM Vijay: முதலமைச்சர் விஜய் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தவெக நிர்வாகி புகார் அளித்தார். இதனால், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை கருத்து
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Aug 2026 07:26 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்தும் அவருடன் தொடர்புடைய பிரபல நடிகை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்த பேச்சு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தன. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழகத்தின் புறநகர் மாவட்ட பொருளாளர் அருண்குமார் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்திடம் பரபரப்பு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தமிழக முதல்வர் குறித்து ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசி இருந்தார்.

ஆர். பி. உதயகுமார் மீது சட்ட நடவடிக்கை தேவை

மேலும், பெண்கள் தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் மிகவும் அவதூறு பரப்பி வருகிறார். இதுபோன்று எதிர்காலத்தில் பொதுவெளியில் எந்த விதமான அவதூறு கருத்துகளையும் மற்றும் தனி நபர் விமர்சனங்களையும் தெரிவிக்காத வகையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், உதயகுமார் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க: இனி 2 நாள்கள் வார விடுமுறையா? மதுரை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு பொதுநல வழக்கு.. முழு விவரம் உள்ளே!

முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியது என்ன

தூத்துக்குடியில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசிய கருத்துக்கள் மிகவும் சர்ச்சையாகி உள்ளது. அவர் என்ன பேசினார் என்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நேற்று பிறந்த டவுசர் பையன் ஜோசப் விஜய் அபகரிக்க முயற்சி செய்கிறான். அத்துடன், அதிமுகவை அளிக்க நினைக்கிறான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராவது அளிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசம் ஆகும்.

காவரி குறித்து கேட்டால் நடிகை குறித்து பதில்

மேலும், காவிரி தண்ணீர் குறித்து பேசினால், காவிரி ஆவது, தண்ணீராவது. எங்கள் அண்ணி ( குறிப்பிட்ட நடிகை) பற்றி யார் பேசியது என்று தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதுதான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

மேலும் படிக்க: விசில் அடித்ததால் சர்ச்சை.. நெல்லை மாமன்ற கவுன்சிலர் சஸ்பெண்ட்.. மேயர் அதிரடி உத்தரவு!

Follow Us