AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீட் தேர்வு தனி தீர்மானம்.. ஒரணியில் நின்று ஆதரித்த உறுப்பினர்கள்.. ஒரு மனதாக நிறைவேறியது!

Neet Exam Resolution : தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்து பேசினார். அவர் என்ன பேசினார் என்பன உள்ளிட்டவை குறித்து இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

நீட் தேர்வு தனி தீர்மானம்.. ஒரணியில் நின்று ஆதரித்த உறுப்பினர்கள்.. ஒரு மனதாக நிறைவேறியது!
நீட் தேர்வுக்கு எதிரான தனி தீர்மானம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 11 Aug 2026 12:54 PM IST

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு கூட்டம் கூடிய நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பிற்பகலில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இதில், நீட் தேர்வு முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12- ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மாணவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையே நீட் தேர்வு இழந்துள்ளது. எனவே, நீட் தேர்வு முறை முற்றிலும் அகற்றப்பட வேண்டும். தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பை நீட் தேர்வு பறித்து வருகிறது.

சமூக நீதிக்கு எதிரானது நீட் தேர்வு

வரம்பின்றி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் அதிகரிப்பதற்கு நீட் தேர்வு வழி வகுத்துள்ளது. 12 ஆண்டு பள்ளிக் கல்வியே புறந்தள்ளி ஒரு நாள் நுழைவுத் தேர்வு உயர்கல்வியே தீர்மானிக்கும் என்பதை ஏற்க முடியாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி 2021- இல் நிறைவேற்றிய சட்டத்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையே நீட் தேர்வு முற்றிலும் இழந்துள்ளது. எனவே, அதனை அகற்ற வேண்டும். நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்களுக்கே அதிக பலன் கிடைக்கிறது. நீட் தேர்வு சமூக நீதி உள்ளிட்ட அவர்களுக்கு எதிரானது.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் வீட்டின் அருகே புதிய தலைமை செயலகம்? கடலின் அழகை ரசிக்க ஏற்பாடு.. அதிகாரிகள் தீவிர ஆய்வு!

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

எனவே, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வு வாள் ஏற்பட்ட பாதிப்புகள், தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் உள்ளிட்டவை தொடர்பாக தங்களது கருத்துக்களை பேரவையில் முன் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் வாக்களிக்கலாம் என்று அறிவித்தார்.

அவையிலிருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ

அப்போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நீட் தேர்வுக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, நீட் தேர்வுக்கு எதிரான தனி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். முன்னதாக நீலகிரி மாவட்டம், ஊட்டி தொகுதி பாஜக எம்எல்ஏ போஜராஜன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தா்.

மேலும் படிக்க: ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!

Follow Us