AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக – அதிமுக ஒன்னா சேர்ந்துடுச்சா?”.. சபாநாயகர் கூறிய வார்த்தை.. சட்டமன்றத்தில் வெடித்த திடீர் பரபரப்பு!

Tamil Nadu Assembly: தமிழக சட்டமன்றத்தில் "திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன" என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறிய கருத்து பெரும் புயலைக் கிளப்பியது. இந்த கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் எ.வ. வேலுவும் அவையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து விவாதம் ஓய்ந்தது.

“திமுக – அதிமுக ஒன்னா சேர்ந்துடுச்சா?”.. சபாநாயகர் கூறிய வார்த்தை.. சட்டமன்றத்தில் வெடித்த திடீர் பரபரப்பு!
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், எ.வ.வேலு, எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Aug 2026 08:26 AM IST

சென்னை, ஆகஸ்ட் 12: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதங்கள் சூடுபிடித்து வருகின்றன. அந்த வகையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியதைத் தொடர்ந்து, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்தச் சூழலை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன” என்ற தொனியில் கூறிய கருத்து அவையில் பெரும் புயலைக் கிளப்பியது. சபாநாயகரின் இந்த பேச்சைக் கேட்டு ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பு உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் கொந்தளித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவிட்டனர்.

இதையும் படிக்க: “முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!

அவையில் வெடித்த அமளியும் சபாநாயகரின் கருத்தும்:

சட்டமன்றத்தில் சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது பேச்சின் நிறைவில் தவெக அமைத்த கூட்டணிக் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக எம்.எல்.ஏ முக்கூர் சுப்பிரமணியன் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்ததற்குச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கண்டனம் தெரிவித்தார். அந்தச் சூழலில், அவையைக் கட்டுப்படுத்த முற்பட்ட சபாநாயகர், திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தக் கருத்து இரு தரப்புக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எ.வ. வேலு மற்றும் இபிஎஸ்-ன் கொந்தளிப்பு:

சபாநாயகரின் இந்த பேச்சுக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்த திமுக கொறடா மற்றும் அமைச்சருமான எ.வ. வேலு, “திமுகவும் அதிமுகவும் ஒன்றாகச் சேர வேண்டிய அவசியம் எக் காலத்திலும் எங்களுக்கு இல்லை; அது எங்களுக்குத் தேவையில்லாத ஒன்று” எனக் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், அதிமுக உறுப்பினர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைச்சர்கள் பேசுவதாகவும், சபாநாயகர் நடுநிலையாகத் தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர, இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிட்டதாகக் கூறக் கூடாது என்றும் வலியுறுத்தினார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எழுந்து நின்று, “எந்தக் காலத்திலும் அதிமுக திமுகவுடன் ஒன்றாகச் சேர்ந்ததில்லை. சபாநாயகர் இருந்த காலத்திலும் நாங்கள் சேர்ந்ததில்லை, நாங்கள் இருக்கும் காலத்திலும் சேர்ந்ததில்லை” எனத் திட்டவட்டமாக விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..

சபாநாயகர் அளித்த தெளிவுரை:

இரு தரப்பு தலைவர்களும் ஒரே நேரத்தில் சபாநாயகரின் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது. நிலைமையைப் புரிந்துகொண்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அவையில் ஒரு விவாதத்தின் போது திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருமே ஒன்றாக எழுந்து நின்று பேசியதால் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறினார். தன்னுடைய பேச்சுக்கு வேறு எந்த அரசியல் அர்த்தத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட சபாநாயகர், அவையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தார்.

Follow Us